தேனிலவில் உயிரிழந்த புதுப்பெண்... அதிர வைத்த காரணம்... கணவர் உருக்கம்!!!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த திருமணமான புதுப்பெண் ஒருவர் மர்மகாய்ச்சலால் தேனிலவின் போது உயிரிழந்துள்ளார்.

Chase- Kelly Clarke தம்பதிகள் தங்கள் திருமணம் முடிந்தவுடன் Oceania நாட்டில் உள்ள Fiji’s Sigatoka ரிசார்ட்டுக்கு தேனிலவு சென்றுள்ளனர்.

தேனிலவு கொண்டாட்டத்தின்போது Kelly- வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. சாதாரண வயிற்றுவலிதானே விரைவில் சரியாகிவிடும் என நினைத்து அன்று இரவு படுக்கைக்கு சென்றுள்ளார்.

ஆனால், அடுத்தநாள் காலையில் காய்ச்சல் ஏற்பட்டதால் உடனடியாக அங்கிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டபோதும், காய்ச்சல் குணமாகமால் கோமா நிலைக்கு சென்றுள்ளார்.


மருத்துவமனையில் அவருக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது, மேலும் பூஞ்சை கிருமி தொற்று ஏற்பட்டு அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது.

கேமாவிலேயே இருந்த இவர் அதிலிருந்து மீளாமல் இரண்டு நாளில் உயிரிழந்தார். புதுமணப்பெண்ணாக துள்ளிக்குதித்த இவர் எவ்வாறு திடீரென உயிரிழந்தார் என்பதை என்னால் நம்பமுடியவில்லை என கணவர் Chase கூறியுள்ளார்.

எனது மனைவி மிகவும் அழகானவள், அறிவானவள். இந்த திருமணத்தின் மூலம் எனது எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என நம்பினேன், ஆனால் இவ்வாறு நடந்தது மூலம் எனது வாழ்க்கை இருட்டிவிட்டது.

எனது மனைவி இறந்துவிட்டாள் என்பதை இதுவரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கூறியுள்ளார். தனது மனைவியின் சடலத்தை அதிகாரிகளின் உதவியுடன் அவுஸ்திரேலியாவுக்கு எடுத்துசென்றுள்ளார்





Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post