பேய்கள் நடமாடும் 600 வருட பழைய திகில் மாளிகை பற்றி உங்களுக்கு தெரியாத இரகசியங்கள்...!

மல்ச்சா மஹால் என அழைக்கப்படும் இந்த திகில் மாளிகை டெல்லியில் அமைந்திருக்கிறது.

இதை விளயாட் மஹால் என்றும் அழைக்கின்றனர். துக்ளக் சாம்ராஜியத்தின் போது தங்குமிடமாக இருந்துள்ளது இந்த மாளிகை.

 பேய் கதைகளில் வருவது போலவே அடர்ந்து காட்டுக்கு நடுவே அமைந்திருக்கிறது இந்த மல்ச்சா மஹால்.

இந்த மாளிகை பற்றி அறிந்துக் கொள்ள சென்றவர்கள் பலர் அலறியடித்து தான் வெளிவந்துள்ளனர்.
சிலர் மாயமாகி போனதாகவும் கூறப்படுகிறது.

பேகம்!
பேகம் என்ற பெண்ணின் இரக்கமற்ற கொடூரமான மரணத்திற்கு பிறகு தான் இது பேய் மாளிகையாக ஆனது என கூறப்படுகிறது.

மர்மம்!
பேகம் ஒரு விசித்திரமான பெண் என்றும் இவரது அணுகுமுறை வினோதமாக இருக்கும் எனவும், மர்மம் விலகாத காரணத்தால் இவர் தற்கொலை செய்துக் கொண்டார் என்றும் சிலர் கூறுகின்றனர்.

திருடப்பட்ட கல்லறை...
மர்மமான முறையில் தற்கொலை செய்துக் கொண்ட பேகத்தின் கல்லறையில் இருந்து உடல் ஒருமுறை திருடப்பட்டுள்ளது. இதன் விளைவாக பேகத்தின் பிள்ளைகள் இவரது உடலை தகனம் செய்து அந்த சாம்பலை ஒரு கண்ணாடி குவளையில் அடைத்து வைத்தனர்.தனிமையில் வாழ்ந்த பேகத்தின் பிள்ளைகள்...
 பேகத்தின் பிள்ளைகளே குறைந்த செலவில், தனிமையில் தான் வாழ்கின்றனர் என கூறப்படுகிறது. இது போன்ற பல காரணத்தால் மால்ச்சல் மஹால் மெல்ல, மெல்ல பேய் மாளிகையாக உருமாற துவங்கியது. ஒரு காலத்தில் இந்த மால்ச்சல் மாளிகை பல மன்னர்களின் உடமையாக இருந்தது.

துக்ளக் ராஜ்ஜியம்!
துக்ளக் ராஜ்ஜியம் தான் முதன் முதலில் இந்த வாழ்ந்தனர். மால்ச்சல் கிராமத்தில் இது ஒரு சமூக இடமாக இருந்தது. 600 வருட வரலாறு கொண்டுள்ளது மால்ச்சல் மஹால்.

பேகத்தின் மரணத்திற்கு பிறகு....
பேகத்தின் மரணத்திற்கு பிறகு சமூக விரோதிகள் அந்த மாளிகையில் செவங்கள் இருக்கின்றன என எண்ணி, தாக்குதல் சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்தனர்.

துப்பாக்கியும், நாய்களும்!
தொடர்ந்து தாக்குதல், சமூக விரோத செயல்களில் சிலர் ஈடுபட்டு வந்ததால் அரசு இவர்களுக்கு துப்பாக்கி மற்றும் நாய்களை பாதுகாப்பிற்கு அளித்தது. பாதுகாப்பிற்கு உள்ள நாய்களுக்கு இறைச்சி வாங்க இளவரசர் சைக்களில் சென்று வருகிறார் என்றும் சில செய்திகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியானது.


 

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post