போயஸ் கார்டனில் சசிகலாவை சந்திக்க விடாமல் கலங்கடிக்கும் நந்தகுமார்...!

நரிக்கு நாட்டமை கிடைத்தால் என்ற பழமொழிக்கு ஏற்ப இப்போது கார்டனில் சிலர் கலக்கி வருகின்றனராம் சூழலைப் பயன்படுத்தி.

அவர்களில் முக்கியமானவராக நந்தக்குமார் என்பவரைக் கை காட்டுகின்றனர்.

யார் இந்த நந்தக்குமார் என்ற கேள்விக்குள் போகும முன்பு அவருக்கு முன்பு இவரது இடத்தில் இருந்தவர் குறித்துத் தெரிந்து கொள்வது நல்லது.

அதிமுக வட்டாரத்தில் பூங்குன்றன் என்றால் உடனே அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை பூங்குன்றனுக்கு போயஸ் கார்டன் வட்டாரத்தில் நல்ல வெயிட் இருந்தது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பூங்குன்றனை துரத்தி விட்டு விட்டனர்.

அந்த இடத்திற்குத்தான் தற்போது நந்தக்குமார் வந்துள்ளாராம். பூங்குன்றன் பார்த்த அத்தனை வேலைகளையும் நந்தக்குமார்தான் பார்த்துக் கொள்கிறாராம்.

நடுங்க வைக்கும் நந்தக்குமாரன்
போயஸ் கார்டனுக்கு வருவோர், வர விரும்புவோர், வர நினைப்போர் என அனைவருமே இவரை பார்த்துதான் இப்போ நடுங்குகிறார்களாம்.
அந்த அளவுக்கு இவர் ஆட்டிப் படைக்கிறாராம்.

போன் போட்டாலே டென்ஷன்தான்
ஜெயலலிதா உயிருடன் இருந்த போது கார்டனின் ரெசிடென்சியல் நெம்பராக 2 போன் லைன்கள் இருந்தன.
அந்த எண்ணில் யார் தொடர்பு கொண்டாலும் ரெஸ்பான்ஸ் இருக்கும்.
இப்போதோ, அந்த எண்களை தொடர்பு கொண்டால் யாருமே எடுப்பதில்லையாம்.

கிடைத்தாலும் நொந்துதான் போகனும்
 பகீரத முயற்சிக்குப் பின் லைன் கிடைத்தால் நந்தக்குமார் பேசுகிறாராம்.
 "அதிமுகவினரின் சின்னம்மா"வை சந்தித்து வாழ்த்துச் சொல்லனும், எப்போ வரலாம்னு "சின்னம்மா"விடம் கேட்டுச் சொல்லுங்கள் என பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கேட்கும் போது, "சின்னம்மா"வை நினைச்ச நேரத்துல பார்க்க முடியாது என்று கூறி விடுகிறாராம் நந்தக்குமார்.ரொம்ப பிசி
"சின்னம்மா" ரொம்ப பிசி. ஏதேனும் சொல்லனும்னா கடிதம் அனுப்புங்க. 10 நாள்ல பதில் வரும் என சொல்கிறாராம் நந்தக்குமார்.

மீறி அழுத்தம் கொடுத்துப் பேசினால் அப்பாயின்ட்மென்ட் கேட்டு கடிதம் அணுப்புங்க, தேவைப்பட்டா கூப்பிடுவாங்க என்கிறாராம் நந்து.

பல நேரங்களில் பதிலே சொல்லாமல் படக்கென லைனை துண்டிக்கப்பட்டுவிடுவாராம்.

தனியே தன்னந்தனியே
 அதேசமயம் நந்து சார் உங்களைத் தனியாகப் பார்க்க வேண்டும் என்று கூறி அணுகுபவர்களுக்கு உடனே சசியை சந்திக்க நேரம் கொடுத்து விடுகிறாராம் நந்துஜி. இதனால் பலர் கடுப்பாகியுள்ளனராம்.

நந்துவா.. நந்தியா!
சசிகலாவைச் சந்திக்க இவர் பெரும் நந்தியாக இருக்கிறாரே என்று அவரைச் சந்திக்கத் துடித்துக் கொண்டிருக்கும் லெட்டர்பேட் லெவல் கட்சிகளின் தலைவர்கள் படு காட்டமாக உள்ளனராம்.டைக் டைவர்ஷன் டு தீபா!
இதனால் நந்தியிடம் போய் தொங்குவதை விட பேசாமல் தீபாவைப் பார்த்து அங்கு சேர்ந்து விடுவோமா என்ற எண்ணத்துக்கு பல குட்டிக் கட்சிகளின் தலைமைக்கு யோசனை வந்திருக்கிறதாம். தி.நகர் பக்கம் வண்டியைத் திருப்புவது குறித்து அவர்கள் தீயாக யோசித்து வருகிறார்களாம்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post