சந்தேகத்தின் விபரீதம் - கர்ப்பிணி மனைவி என்று பாராமல் கணவன் செய்த கொடூரம்...!

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கர்ப்பிணியான மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அடுத்துள்ள நாயகனை பிரியாள் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமனின் மனைவி நாகம்மாள் என்வருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, நாகம்மாள் கணவரை பிரிந்து, மணிகண்டனை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே வெளிநாட்டில் வேலை செய்து திரும்பிய மணிகண்டனுக்கு, மனைவி மீது தீராத சந்தேகம்.

இதனால், இவர்களுக்கு பிறந்த குழந்தையை தன்னுடையது இல்லை எனக்கூறி நாகம்மாளிடம் சண்டை போட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த நாகம்மாளுக்கும், மணிகண்டனுக்கும் இடையே நேற்று காலை தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, நாகம்மாளின் கர்ப்பத்திற்கு தான் காரணமில்லை எனக் கூறிய மணிகன்டன், தொடர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.தகராறு தீவிரமடையவே, மனைவியை 5 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் மணிகண்டன்.

பின்னர் காவல்நிலையத்தில் சரணடையைச் சென்ற மணிகண்டனை, போலீஸார் வழியில் மறித்து கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post