படுக்கையில் சிறப்பாக செயல்பட... நீங்க கொஞ்சம் வெஜிடேரியனா மாறுங்க!!!

படுக்கையில் சிறந்து செயல்பட ஆண்கள் என்னென்னவோ முயற்சி செய்கிறார்கள்.

புரதச்சத்து பவுடர்கள் எடுத்துக்கொள்வது, வயாகரா போன்ற மாத்திரைகள் உட்கொள்வது, தீவிரமான உடற்பயிற்சி என எண்ணற்ற செயல்களில் ஆண்கள் ஈடுபடுகிறார்கள்.

ஆனால், மிக எளிய வழியாக திகழ்கிறது சைவ உணவு சாப்பிடும் பழக்கம்.

ஆம், பழங்கள், காய்கறிகள், தானிய உணவுகள் போன்ற சைவ உணவை உங்கள் டயட்டில் அதிகம் சேர்த்துக் கொள்வதால் படுக்கையில் நீங்கள் சிறந்து விளங்க முடியும்.

படுக்கையில் சிறந்து விளங்க நிறைய பலன்களை தருகிறது சைவ உணவுப் பழக்கம்.

இது இயற்கையாக உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகம் சுரக்கவும், இரத்த ஓட்டம் அதிகரிக்கவும், நல்ல உறக்கத்தையும் தருகிறது.

இவையெல்லாம் படுக்கையில் ஆண்கள் சிறந்து விளங்க உதவிகிறது...

பலன் 1
அசைவம் சாப்பிடும் ஆண்களை விட, சைவ உணவு சாப்பிடும் ஆண்களுக்கு 10% டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிமாக சுரக்கிறதாம்.

பலன் 2
 பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வொன்றில், அசைவ உணவு சாப்பிடும் ஆண்களைவிட, சைவ உணவு சாப்பிடும் ஆண்களிடம் தான் படுக்கையில் அதிகம் இனிமையாக உணர்கிறார்கள் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலன் 3
இறைச்சி சாப்பிடும் ஆண்களை விட, சைவ உணவுகள் சாப்பிடும் ஆண்கள் தான் உடல் எடையை சீராக பராமரிக்கிறார்கள். உடல் எடை பராமரிப்பு உடலுறவில் பெரும் பங்கு வகிக்கிறது.

பலன் 4
 சைவ உணவு சாப்பிடும் ஆண்களின் சருமம் அதிகம் பளபளப்பாக இருக்கிறதாம். இது பெண்களை மிகவும் அதிகம் ஈரிக்கிறது.


பலன் 5
ஆண்மை குறைபாடு பிரச்சனையால் பாதிக்கப்படும் அளவில், அசைவ உணவு சாப்பிடும் ஆண்களை விட, சைவ உணவு சாப்பிடும் ஆண்கள் குறைவான எண்ணிக்கையில் தான் உள்ளனர்.

பலன் 6
சில பழங்கள் மற்றும் காய்கறிகள் இரத்த ஓட்டத்தை சீரான முறையில் இயக்க உதவுகிறது. ஆண்களின் உடலுறவை பலப்படுத்த இரத்த ஓட்டம் மிக முக்கியமாகும். இந்த வகையிலும் சைவ உணவு சாப்பிடும் ஆண்கள் தான் முன்னிலை வகிக்கிறார்கள்.

பலன் 7
 ரொமான்ஸ் செய்ய மனநிலையும் ஒத்துழைக்க வேண்டும். சைவ உணவு சாப்பிடும் ஆண்களது மனநிலை, அசைவ உணவு சாப்பிடும் ஆண்களின் மனநிலையை விட தெளிவாக இருக்கிறதாம். இது, படுக்கையில் சிறந்து செயல்பட உதவுகிறதாம்.

பலன் 8
அசைவ உணவுகளைவிட, சைவ உணவுகள் தான் உடல் சக்தியை அதிகரிக்கிறது. இது உடலுறவில் சிறந்த முறையில் ஈடுபட உதவுகிறது.

பலன் 9
சைவ உணவுகள் சாப்பிடுவதால் உங்கள் உடல் செல்களின் முதிர்ச்சி குறைகிறது. உங்களை இளமையாக தோற்றமளிக்க உதவும். ஒட்டுமொத்தமாக இவை படுக்கையில் நீங்கள் சிறந்து செயல்பட உதவுகிறது.

பலன் 10
 சைவ உணவு சாப்பிடுவதால், நீங்கள் நன்கு உறங்க முடிகிறது. நல்ல உறக்கம் ஆண்களின் ஆண்மையை வலிமையாக்கும். இது, படுக்கையில் நீங்கள் சிறந்து செயல்பட உதவுகிறது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post