ஆண்களுக்கு உறுப்பு அரிப்பு ஏற்படுவதற்கான காரணிகள்!!

இரண்டு விஷயங்கள் பெரும் தர்மசங்கடத்தை உண்டாக்கும் ஒன்று நால்வர் நம்மை சுற்றி இருக்கும் போது வாயு வெளியேற்றுவது, அடுத்தது பொது இடத்தில் "அங்கே" அரிப்பு ஏற்படுவது.

இந்த இரண்டையுமே அடக்குவதும் கடினம், பொறுத்துக் கொள்வதும் கடினம்.

அதிலும், ஆண்களுக்கு தொடைகளின் இடுக்கில் ஏற்படும் அரிப்பை காட்டிலும், ஆணுறுப்பில் ஏற்படும் அரிப்பு பெரும் தர்மசங்கடமாக இருக்கும்.

அசௌகரியமான சூழலை ஏற்படுத்தும். ஏன் ஆணுறுப்பில் அரிப்பு ஏற்படுகிறது?

இதன் காரணிகள் என்ன? இதற்கான சிகிச்சைகள் என்னென்ன? என்று இந்த தொகுப்பில் காணலாம்....

காரணிகள்!
ஆண்களுக்கு ஆணுறுப்பில் அரிப்பு ஏற்படுவதற்கான காரணிகள்... காய்ச்சல் சிறுநீர் பாதை தொற்று / பிரச்சனை வீக்கம் தடிப்புகள் எரிச்சல் உணர்வு சிவந்து காணப்படுதல்

பாதிப்புகள்!
அலுவலகத்தில் உட்கார முடியாத நிலை ஏற்படுத்தும், நால்வர் மத்தியில் பேசிக் கொண்டிருக்கும் போது நிற்க முடியாத நிலை உண்டாகலாம், சிறுநீர் கழிக்கும் போது அசௌகரியம், தாம்பத்திய வாழ்வில் கூட இது தாக்கங்கள் உண்டாக்கலாம்.

காரணங்கள்!
ஆணுறுப்பின் உட்பகுதியில் ஸ்மெக்கா எனும் வெள்ளை துகள் படிமம் சேரும். இதை தினமும் குளிக்கும் போது சுத்தம் செய்ய வேண்டும். இதை சரியாக செய்யாமல் இருந்தால் அரிப்பு உண்டாகலாம்.

இரசாயனங்கள்!
 நாம் பயன்படுத்தும் சோப்பு, துணி துவைக்கும் டிடர்ஜென்ட், உள்ளாடை சுகாதாரம், இரசாயன பொருள் சேர்க்கை கூட இதற்கான காரணிகளாக இருக்கலாம். இதன் மூலம் உண்டான எதிர்வினை தாக்கமாக இருக்கலாம்.


பால்வினை நோய்கள்!
 கொனோரியா ட்ரைக்கோமோனியாசிஸ் பிறப்புறுப்பு மருக்கள் கிளாமீடியா அந்தரங்க உறுப்புகளில் பேன், போன்ற பால்வினை நோய்கள், பிரச்சனைகள் கூட இதற்கான காரணியாக இருக்கலாம்.

உள்ளாடை!
உள்ளாடைகளை இறுக்கமாக அல்லது மிகவும் பழையது, சரியாக துவைக்காத உள்ளாடைகளை அணிவது, மற்றவரது உள்ளாடைகளை பயன்படுத்துதல் போன்றவை கூற ஆணுறுப்பு அரிப்பு உண்டாக காரணியாக இருக்கலாம்.

எப்படி கண்டறிவது?
பலரும் செய்யும் தவறு என்னவெனில், இதை எப்படி வெளியே கூறுவது, மருத்துவரிடம் எப்படி இதை பற்றி கூறி பரிசோதனை செய்துக் கொள்வது என தயக்கம் காண்பிக்கின்றனர். இதை முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும், மருத்துவரிடம் சென்ற பிறகு, எத்தனை நாட்களாக இருக்கிறது? உங்கள் சரியான சுகாதரா நிலை பற்றி தெளிவாக கூற வேண்டும். அப்போது தான் எந்த காரணத்தால் ஆணுறுப்பு அரிப்பு பிரச்சனை உண்டாகிறது என கண்டறிய முடியும்.

கருத்தில் கொள்ள வேண்டியவை:
 அதிக இரசாயன கலப்பு கொண்ட சோப்பு, டிடர்ஜெண்ட் பயன்படுத்த வேண்டாம். இனப்பெருக்க பகுதியில் அழகுசாதன பொருட்கள், பர்ஃபியூம் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். இறுக்கமான உள்ளாடை அணிவதை தவிர்க்க வேண்டும். குளிக்கும் போது ஆணுறுப்பை சுத்தமாக கழுவ வேண்டும். ஆரோக்கியமான ஆணுறைகள் பயன்படுத்த வேண்டும். முக்கியமாக மருத்துவர் கூறும் மருந்துகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post