இயற்கையான முறையில் சிறுநீரக கற்களைக் கரைக்க இந்த பழங்களை சாப்பிடுங்கள்!!

சிறுநீரகத்தில் உருவாகும் கற்களால் ஏற்படுவது கொடும் அவதி. அந்த அவதியில் இருந்து தப்பிக்க நாம் இயற்கையான வழியைக் கூட நாடலாம்.

அதற்கு ‘சிட்ரஸ்’ பழங்கள் பெரிதும் உதவுகின்றன.

கால்சியம் ஆக்சலேட் என்ற தாதுதான் நம் உடலில் சிறுநீரகக் கற்களாக மாறுகிறது. அதுவும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் ஏற்படும் அபாயம் அதிகம்.


சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் கீரைகள், ஆக்சலேட் உள்ள உணவுகள் ஆகியவற்றை அதிகம் சாப்பிடக் கூடாது. ஆனால் தினசரி அதிகமாக நீரை குடிக்க வேண்டும்.

எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரிக் அமிலம் நிறைந்த ‘சிட்ரஸ்’ பழங்களை தினமும் சாப்பிட்டு வந்தால், சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க முடியும்.

அதோடு, உருவான சிறுநீரகக் கற்களை கரைக்கும் ஆற்றலும் சிட்ரஸ் பழங்களுக்கு உள்ளது.

சிட்ரஸ் பழங்களில் உள்ள ஹைட்ராக்சி சிட்ரேட் என்ற பொருள், சிறுநீரகக் கற்களை உருவாக்கும் கால்சியம் ஆக்சலேட்டை கரையச் செய்துவிடும் என்பது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் மூலம் தெரியவந்திருக்கிறது. 

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post