தினமும் கண்கள் அடிக்கடி சிவந்து போவதற்கு காரணம் என்ன?

சிலருக்கு கண்கள் அடிக்கடி சிவந்து போகும். அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், நாம் அதை அறிந்துக் கொள்ளாமல் அலர்ஜி என்று கடைகளில் விற்கும் சொட்டு மருந்தை பயன்படுத்தி, தற்காலிகமாக அதை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறோம்.

ஆனால் அப்படி செய்வது மிகவும் தவறான செயல் ஏனெனில் கண்கள் சிவப்பிற்கு பல காரணங்கள் இருக்கிறது.

நமது கண்களில் ஏற்படும் அலர்ஜிக்கு எதிராக செயல்படும் ஆன்டி ஹிஸ்டமின் மற்றும் தூக்க மாத்திரைகளை நாம் சாப்பிட்டால், கண்களை வறண்டு அலர்ஜியை ஏற்படுத்துவதுடன், கண்களைச் சுற்றியுள்ள திசுக்களில் ரத்த ஓட்டத்தை குறைத்து கண்களை சிவப்பு நிறமாக மாற்றுகிறது.

கண்கள் சிவப்பு நிறமாகுவதை தடுக்கும் வொயிட்டனிங்க் சொட்டு மருந்தை தொடர்ந்து பயன்படுத்துவதால், நமது கண்களை மிகவும் மோசமான நிலைக்கு கொண்டு செல்கிறது. ஏனெனில் நமது கண்கள் அந்த மருந்திற்கு பழகிக் கொள்வதால், இந்த மருந்தை நிறுத்தும் போது, கண் மீண்டும் சிவப்பு நிறத்தை அடைகிறது.

நாம் அதிகமாக மது அருந்தும் போது, ரத்த அழுத்தம் உண்டாகிறது. இதனால் கண்களைச் சுற்றியுள்ள மிக நுண்ணிய ரத்தக் குழாய்களில் அழுத்தம் அதிகரித்து கண்களை சிவந்து போவதற்கு காரணமாக இருக்கிறது.

தினமும் சிகரெட்டை அடிக்கடி புகைத்தால், அது நமது கண்களைச் சுற்றியுள்ள நரம்புகள் இறுக்கம் அடையச் செய்து, கண்கள் சிவந்து போகச் செய்கின்றது.

பிங்க் ஐ என்பது வைரஸ் அல்லது பாக்டீரியாக்களின் தொற்றுக்கள் மூலம் ஏற்படுவது. எனவே இந்த நோய் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவுவதால் கூட கண்கள் சிவந்து போகிறது.

நீச்சல் குளத்தில் கலக்கப்படும் குளோரின் கண்களின் செயல்படும் நல்ல பாக்டீரியக்களை அழிக்கிறது. இதனால் நாம் அதிக நேரம் நீச்சல் அடித்தால், கண்கள் சிவந்து வறட்சி மற்றும் எரிச்சலை உண்டாக்குகிறது.

நாம் கண்கள் அழுத்தும் வகையில், தவறான ஒரு முறையில் தூங்கும் போது ரத்த அழுத்தம் திடீரென கண்களில் அதிகமாகி சிவந்து போகும் வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.
Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post