மூட்டு வலியை மாயமாய் மறையச் செய்யும் அற்புத எண்ணெய்!!!!

எலும்புகள் இணையும் இடங்கள் தான் மூட்டுகள். அந்த மூட்டுகள் தான் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர உறுதுணையாக இருக்கின்றன.

ஏதேனும் உடல்நல பிரச்சனையால் மூட்டுக்களில் பாதிப்புகள் அல்லது காயங்கள் ஏற்பட்டால், அதனால் நடப்பதில் இடையூறு ஏற்பட்டு, கடுமையான வலியை உணரக்கூடும்.

மூட்டு வலிகளானது குறிப்பிட்ட செயலை அளவுக்கு அதிகமாக செய்தாலோ அல்லது மிகவும் கடுமையான எடையைக் கொண்ட பொருளை அதிகமாக தூக்கினாலோ ஏற்படும்.

இக்காலத்தில் ஆர்த்ரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற மூட்டு சம்பந்தமான பிரச்சனையால் ஏராளமான மக்கள் அவஸ்தைப்பட்டு வருகின்றனர்.

இத்தகையவர்களுக்கு ஓர் அற்புத எண்ணெய் ஒன்று உள்ளது. அந்த எண்ணெயை வீட்டிலேயே செய்து பயன்படுத்தினால், சில நிமிடங்களில் மூட்டு வலிகள் காணாமல் போய்விடும்.

தேவையான பொருட்கள்:

மிளகு - 1 டேபிள் ஸ்பூன்

ஆலிவ் ஆயில் - 1/4 கப்

தயாரிக்கும் மற்றும் பயன்படுத்தும் முறை:
 * முதலில் ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதில் மிளகு சேர்த்துக் கொள்ள வேண்டும்.


 * பின் அந்த எண்ணெயை மூட்டு வலி இருக்கும் இடத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் அவ்விடத்தைக் கழுவ வேண்டும்.

* இப்படி ஒரு முறை செய்தால், சற்று நிவாரணம் கிடைப்பதை உணரலாம். ஆனால் நல்ல பலன் கிடைக்க ஒரு நாளைக்கு 2-3 முறை செய்ய வேண்டும்.

மிளகின் குணம்
 மிளகில் கேப்சைசின் என்னும் உட்பொருளுடன், இயற்கை வலி நிவாரணப் பண்புகள் உள்ளது. இதனைப் பயன்படுத்தி எண்ணெய் தயாரிக்கும் போது, மூட்டு வலியில் இருந்து ஓர் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

கேப்சைசின்
மிளகில் உள்ள கேப்சைசின், வலியை மூளைக்கு அனுப்பும் நம்பியக்கடத்துகைப் பொருளான P-யைக் குறைக்கும். எனவே தான் இந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்தால், வலி குறைகிறது.

குறிப்பு
 ஆரம்பத்தில் இந்த எண்ணெயை தடவும் போது, சற்று எரிச்சலை உணரக்கூடும். எனவே இந்த எண்ணெயை வலி உள்ள இடத்தில் தடவும் போது, கைகளுக்கு கையுறையை அணியுங்கள். மேலும் இந்த எண்ணெயை வெட்டுக் காயங்கள் இருக்கும் இடத்தில் பயன்படுத்தாதீர்கள்.

உடனே மருத்துவரை அணுக வேண்டியவர்கள்
 * எவ்வித முயற்சியும் இல்லாமல் 5 கிலோவிற்கு அதிகமாக உடல் எடை குறைந்தால்.

* மூட்டு வலி 3 நாளைக்கு மேல் நீடித்திருந்தால்.

* சொல்ல முடியாத அளவில் மூட்டுகளில் வீக்கத்துடன் வலியை உணர்ந்தால்.
 

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post