தினமும் இளநீர் அருந்தி வந்தால் இவ்வளவு நன்மைகளா...?

வெப்ப நாடுகளில் வாழ்பவர்களின் உடல் நிலை அதன் தன்மைக் கேற்ப அமையும். ஆனால் தட்பவெப்ப நிலை மாறுபட்டால் உடலில் பித்த நீர் அதிகரித்து, உடல் அதிக உஷ்ணமாகும். இதனால் உடலில் பல வியாதிகள் ஏற்படும்.

இவை நீங்க தினமும் இளநீர் அருந்தி வந்தால் உடல் சூடு தணியும். கண்கள் குளிர்ச்சி பெறும். வயிற்று நோய்கள் அகலும். நீண்ட பட்டினி, அதிக உணவு, உடலுக்கு ஒவ்வாத உணவு இவற்றால் ஏற்படும் அஜீரணக் கோளாறு அனைத்தையும் தீர்க்கும் குணம் இளநீருக்கு உண்டு. இளநீர் ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற அசுத்த நீர்களை நீக்கும். ரத்தச் சோகையைப் போக்குகிறது.

ரத்தக் கொதிப்பைக் குறைக்கும் சக்தி இளநீருக்கு உண்டு. அதனால் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு இளநீர் சிறந்த மருந்தாகும். குழந்தைகளுக்கு கொடுத்தால் இதிலுள்ள சத்துகள் எலும்புகளுக்கும், உடல் உறுப்புகளுக்கும் வலுகொடுக்கும். உடல் வளர்ச்சி சீராக இருக்கும். குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்களைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அம்மை நோயின் தாக்கம் கண்டவர்கள் இளநீர் அருந்தினால் நோயின் வீரியம் குறையும். நாவறட்சி, தொண்டைவலி நீங்கும். சிறுநீர் பெருக்கியாகவும், சிறுநீரகம் சீராக இயங்கவும், இளநீர் உதவுகிறது.

சிறுநீரக கல்லடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. மூளைக்கு புத்துணர்வும், நரம்புகளுக்கு வலுவும் ஏற்படுத்து கிறது. நினைவாற்றல் தூண்டப்படுகிறது. மது பழக்கம் உள்ளவர்களின் கல்லீரல் அதிகம் பாதிப்படையும். அதனை சீர் படுத்தும் குணம் இளநீருக்கு உண்டு. ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதால் இதயம் சீராக செயல்படும் இதய வால்வுகளை பலப்படுத்தும்.


தினமும் இளநீர் அருந்தி வந்தால் இதய நோய் எதுவும் அணுகாது. பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் அடிவயிறு வலிக்கு இளநீர் சிறந்த மருந்தாகும். டைபாய்டு, மஞ்சள் காமாலை நோயின் தாக்குதல் கொண்டவர்கள் இளநீர் அருந்தினால் உடல் விரைவாகத் தேறும். இளநீரில் சுண்ணாம்புச்சத்து நிறைந்திருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கும், உறுதிக்கும் உதவுகிறது.

இந்திய மருத்துவ முறையில் இளநீர் பெரும்பங்கு வகிக்கிறது. இளநீர் ஒரு சிறந்த டானிக்காக வயதானவர்களுக்கும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பயன்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு இது ஒரு அருமருந்து. இளநீர் தினமும் அருந்தினால் உடல் வலுப்பெறும். மலச்சிக்கல் தீரும். அடிக்கடி இளநீர் பருகி நீண்ட நாள் ஆரோக்கியம் பெற்று வாழ்க. 

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post