பல் துலக்காமல் இரவு தூங்குவதால் ஏற்படும் தீமைகள் பற்றி தெரியுமா..?ஆனால், நாம் பெரிதாக கடைப்பிடிக்க மாட்டோம். எப்படி புகை கெடுதல் விளைவிக்கும் என்று தெரிந்தே புகைக்கிறோமோ, அப்படி தான் இரவு பல் துலக்குவது நல்லது என தெரிந்தும் ஒதுக்குகிறோம்.

இரவு பல் துலக்காமல் உறங்கினால் அப்படி என்ன கெடுதல் ஏற்பட்டுவிட போகிறது என எண்ணுகிறோம்.

ஆனால், காலப்போக்கில் உங்களுக்கு ஏற்படும் ஈறு பிரச்சனை, பல் பிரச்சனைகளுக்கு இது தான் மூலக் காரணமாக விளங்குகிறது....

எவ்வளவு கெடுதல்?
எல்லா உயிரினங்களின் வாயிலும் உணவருந்திய பிறகு, கழிவுகள் வெளியேற்றம் அடையும் போது பாக்டீரியாக்கள் தங்கும். நீங்கள் இரவு பல் துலக்காமல் உறங்குவதால், பாக்டீரியாக்கள் மெல்ல, மெல்ல பற்களின் ஆரோக்கியத்தை சீரழிக்கும்.

பிளேக்!
நீங்கள் இதை சரியாக பின்பற்றாமல் போனால், காலப்போக்கில் இது பிளேக் உருவாக காரணியாகிவிடும். மேலும், இதை டூத்பிரஷ் வைத்து சுத்தம் செய்ய முடியாது, பல் மருத்துவமனைக்கு சென்று தான் சுத்தம் செய்ய வேண்டும்.

பற்களின் ஆரோக்கியம்...
 பிளாக் ஏற்படுவது ஈறு தொற்று / பிரச்சனைகள் உண்டாக காரணியாகும். இதனால், பற்கள் வலுவிழந்து போகும்.

ஒரே நாளில்...
இரவு பல் துலக்குவதால் டூத்பேஸ்ட்டில் இருக்கும் ஃப்ளோரைடு நீண்ட எடுத்துக் கொண்டு பற்களின் வலிமையை அதிகரிக்க செய்கிறது. மேலும், தொடர்ந்து இரவிலும் பல் துலக்கி வருவது தான் சுகாதாரமான பழக்கம். இந்த பழக்கத்தை வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு சிறு வயது முதலே கற்பிக்க தவற வேண்டாம்.

இரவு தான் என்றில்லை...
 24 மணி நேர சுழற்சியில் நீங்கள் சீரான இடைவெளியில் இரண்டு முறை பல் துலக்க வேண்டியது கட்டாயம் என அமெரிக்க பற்கள் நல சுகாதார அமைப்பை சேர்ந்த மருத்துவர்கள் கூறுகின்றனர். இரவு தான் பல் துலக்க வேண்டும் என்றில்லை.. ஆயினும் 12 மணி நேரத்திற்கு ஒரு முறை என பிரிக்கும் போது இரவு சாதகமான நேரமாக அமைகிறது.


 
இரண்டு நிமிடம்...
 பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறேன் என நீண்ட நேரம் பல் துலக்க வேண்டாம். அதிக நேரம் பிரஷ் கொண்டு பல் துலக்குவதும் தவறான அணுகுமுறை தான். அதிக பட்சம் 2 - 3 நிமிடங்கள் போதுமானது.

சுறுசுறுப்பான காலை....
இரவு பல் துலக்கும் பழக்கம், அடுத்த நாளை நீங்கள் சுறுசுறுப்பாக துவங்க பயனுள்ளதாக அமையும்.
 

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post