பிஞ்சு குழந்தைகளின் இதழ்களில் ஏன் முத்தம் கொடுக்க கூடாது தெரியுமா..?

அனைவருக்குமே குழந்தைகள் என்றால் அலாதி பிரியம் தான். அதுவும் பச்சைக் குழந்தை என்றால், கேட்கவே வேண்டாம். உடனே எடுத்துக் கொஞ்சத் தொடங்கி விடுவோம். அதேசமயம், குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பதில் மிகவும் கவனம் தேவை. ஏனெனில், இதனால் அவர்களின் நலன் பாதிப்படைய வாய்ப்பு அதிகம்.

இதழ்களில் முத்தம் வேண்டாம்:

குழந்தைகளை இதழ்களில் முத்தமிடுவது மிகவும் தவறான செயல். ஏனெனில், 85% பாக்டீரியாக்கள் இதழ் / வாய் மூலமாக தான் பரவுகிறது. இதனால், குழந்தையின் நலன் பாதிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.

கல்லீரல் மற்றும் மூளை:

குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று உண்டானால், அது முதலில் கல்லீரல் மற்றும் மூளையை தான் வெகுவாக பாதிக்கும். எனவே, குழந்தைகளை இதழ்களில் முத்தமிடுவதை தவிர்ப்பது அவசியம்.முதல் மூன்று மாதங்கள்:

பிறந்த மூன்று மாதங்களில் குழந்தைகளால், கிருமிகளை எதிர்த்து போராட முடியாது. அதற்கு ஏற்ற நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது.

கடுமையான வைரஸ்:

அபாயகரமான வைரஸ் தொற்றுஉள்ள நபர்கள் சுத்தமாக குழந்தைகளை முத்தமிடக் கூடாது. இது குழந்தைகள் இறக்க கூட காரணமாக அமையலாம்.

நோய்:

காய்ச்சல் போன்ற இதர நோய் தொற்று உள்ளவர்களும் குழந்தைகளை முத்தமிடுவது தவிர்க்கவும். இது முழுக்க, முழுக்க குழந்தையின் ஆரோக்கியத்திற்காக மட்டுமே கூறப்படுவது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post