முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்டதே நான் தான்: மார்தட்டும் நடராஜன்!

எம்ஜிஆர் இறந்த பின்னர் அதிமுக பிளவுபட்டு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டபோது இரட்டை இலை சின்னத்தை மீட்டதே நான் தான் என சசிகலாவின் கணவர் நடராஜன் கூறியுள்ளார்.

உடல் நலக்குறைவால் சிறிது காலம் அரசியல் நிலவரங்கள் குறித்து கருத்துக்கள் கூறாமல் இருந்து வந்த சசிகலாவின் கணவரும், புதிய பார்வை இதழின் ஆசிரியருமான நடராஜன் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

 
அப்போது பேசிய அவர், அதிமுக இரண்டு அணிகளாக பிரிவதற்கு அப்போதும், இப்போதும் காரணம் பி.ஹெச்.பாண்டியன் தான். அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்தால்தான் மற்ற கட்சிகளை வீழ்த்த முடியும். இரட்டை இலை சின்னத்தை யார் முடக்கினாலும் மக்கள் அவர்களை ஏற்றுகொள்ள மாட்டார்கள்.
 
எம்ஜிஆர் இறந்த பின்னர் அதிமுக இரு அணியாக பிளவுபட்டது. அப்போதும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அப்போது இரட்டை இலை சின்னத்தையும், தலைமைக் கழகத்தையும் மீட்டு வந்தவன் நான் என பெருமைப்பட்டுக்கொண்டார் நடராஜன். மேலும் தற்போது இரு அணிகளும் இணைந்து இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post