அப்பல்லோவுக்கு ஜெ. வின் மருத்துவ செலவை கொடுத்த அம்மா அணி... எவ்வளவு தெரியுமா..?

முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு 2 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டது. வெளிநாட்டு மருத்துவர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் டிசம்பர் 5-ந்தேதி ஜெயலலிதா உயிர் இழந்தார்.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட வகையில் ரூ.6 கோடி மருத்துவ செலவு ஆனது. ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்ததால் அவரது மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் இந்த மருத்துவ செலவை அ.தி.மு.க. (அம்மா அணி) ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது.


அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஜெயலலிதா மருத்துவ செலவான ரூ.6 கோடியை கட்சி நிதியில் இருந்து வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இதற்கான தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் ஜெயலலிதா மருத்துவ செலவான ரூ.6 கோடி அப்பல்லோ மருத்துவமனையிடம் வழங்கப்பட்டது.

கட்சி பிரதிநிதி ஒருவர் இதற்கான செக்கை அப்பல்லோ மருத்துவமனையிடம் நேற்று கொடுத்தார். இதை கட்சியின் செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் தெரிவித்தார்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post