ஓடும் விமானத்தில் பயணித்த பெண் பயணிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த நபர்!!

இண்டிகோ விமானத்தில் பயணித்த பெண் பயணிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை (17ம் தேதி), ஹைதராபாத்தில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்ற இண்டிகோ விமானத்தில் 46 வயது நிரம்பிய பெண் பயணி ஒருவர் பயணித்துள்ளார்.

அப்போது, அவருடன் பயணம் செய்த 56 வயது நிரம்பிய ஒருவர், விமானத்தில் சுய இன்பம் அனுபவித்துள்ளார். இதனைக் கண்ட அப்பெண்மணி, விமானப் பணிப்பெண்ணுக்கு தெரியப்படுத்திவிட்டு வேறு இடம் மாறி உட்கார்ந்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து விமானம், டெல்லி, இந்திராகாந்தி விமான நிலையம் வந்தவுடன், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு பின்னர், உள்நாட்டு விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அப்பெண்மணி.

இதன் காரணமாக, விமான நிலையத்தில் வைத்து அப்பெண்மணிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் மீது ஐபிசி பிரிவு 354ஏ மற்றும் 509 ஆகியவற்றில் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post