கடத்தப்பட்ட மாணவி கர்ப்பமாக வீடு திரும்பிய அவலம்... அதிர்ச்சியில் பெற்றோர்!!!

டெல்லியில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட 13 வயது மாணவி ஒருவர் கர்ப்பமாக வீடு திரும்பிய சம்பவம் அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.

இரண்டு மாதத்துக்கு முன் மே 6 ஆம் திகதி ஐஸ்கிரீம் வாங்கி வருதாகச் சொல்லிவிட்டு வெளியே சென்றுள்ளார்.

ஆனால் சிறுமி வீடு திரும்பவில்லை. இதையடுத்து சிறுமியின் தந்தை பொலிஸாரிடம் புகார் செய்துள்ளார்.

இதுகுறித்து பொலிஸார் எந்தவித முயற்சியும் எடுக்காமல் இருந்துள்ளனர்.

இதையடுத்து அவர் பொலிஸாரிடம் ரூ.45 ஆயிரம் பணம் கொடுத்து தேடிக் கண்டுபிடிக்கக் கூறியுள்ளார்.


சிறுமியின் வீட்டின் அருகில் வசித்த ஒருவன் தனோ முன்வந்து சரணடைந்தான்.

இதையடுத்து பொலிஸார் சரணடைந்தவன் உதவியுடன் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 3 வார கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சிறுமியின் வீட்டருகே ஓட்டல்களில் வேலைபார்த்த 12 பேர் குடியிருந்துள்ளனர். அவர்கள்தான் சிறுமியை கடத்தி பாலியல் வன்முறை செய்துள்ளனர் என்ற தகவல் தெரியவந்துள்ளது.

பொலிஸார் சம்பந்தபட்ட குற்றவாளிகளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அது மட்டுமின்றி சிறுமியை தேடுவதற்கு பணம் கேட்ட பொலிஸார் மீதும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post