இரவு நேர களியாட்ட விடுதியில் பணியாற்றும் இஸ்லாமிய பெண் பவுன்சர்!!

கேளிக்கை விடுதிகளில் தடிமனான 6 அடிக்கும் மேல்  கட்டு கோப்பான உடல் 
அழகுடன் பவுன்சர்கள் எனப்படும் அதிரடி பாதுகாவலர்கள் இருப்பது வழக்கம். அப்படி தலைநகர் டெல்லியில் இரவு விடுதி ஒன்றில் இளம் பெண் ஒருவர் பவுன்சராக பணியாற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்.

பாரம்பரியமான, கட்டுப்பாடுகள் மிகுந்த இஸ்லாமிய குடும்பத்தில் இருந்து வந்தவர் மெகருன்னிசாஷோகாட் அலி .  மெகருன்னிசாவுக்கு  ராணுவம் அல்லது காவல்துறையில் சேர வேண்டும் என்பதே  லட்சியமாக இருந்து உள்ளது. அந்த கனவு நிறைவேறாமல் போனதால்  பவுன்சர் வேலைக்கு வந்துள்ளார். தற்போது இந்த பவுன்சர் வேலை தனக்கு திருப்தி அளிப்பதாக உற்சாகத்துடன் கூறுகிறார் மெஹருன்னிசா.


டெல்லியில் உள்ள குறிப்பிட்ட இரவு கேளிக்கை விடுதியில் ஏராளமான இளைஞர்களும் இளம்பெண்களும் தங்கள் பொழுதுகளை உற்சாகத்துடன் கழித்துக்கொண்டிருக்க, கருப்புச்சட்டை, மிரட்டும் விழிகள், அதிரடி தோற்றத்துடன் மெகருன்னிசா பாதுகாவலராக நின்று கொண்டிருக்கிறார்.

வழக்கமாக பவுன்சர்கள் எனப்படும் ஆண் அதிரடி பாதுகாவலர்களே இரவு விடுதிகளில் பாதுகாப்புக்கு இருக்கும் வேளையில் மெகருன்னிசா இந்தியாவின் முதல் பெண் அதிரடி பாதுகாவலராக பத்து மணிநேரம் அசராமல் பணியாற்றுகிறார்.

அத்துமீறும் பெண் வாடிக்கையாளர்கள், போதைப்பொருட்களை கொண்டு வருவோர் மற்றும் மதுபான கூடத்தில் நடக்கும் சண்டையில் ஈடுபடுவோரை சமாளிப்பது என பவுன்சர்களின் வேலை கடினமானது என்றாலும் மெகருன்னிசா அதனை விரும்பி செய்வதாக கூறுகிறார்.





Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post