பேஸ்புக்கில் மலர்ந்த காதல்.. கணவணை மீட்க போராடும் மனைவி!!

தமிழகத்தில் கணவரை மீட்டுத் தர கூறி, மனைவி கணவரின் பெற்றோர் வீட்டின் முன்பு மூன்றாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், கடம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்வரன்(23). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இதே போன்று சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சுளா(23) என்ற பெண் மற்றொரு நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் இருவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது.

இவர்களின் காதலுக்கு வெங்கடேஸ்வரன் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஏனெனில் அப்பெண் வேறோரு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெற்றோர் மறுத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து வெங்கடேஷ்வரன் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 21-ஆம் திகதி திருமணம் செய்துள்ளார்.

இதனால் பெற்றோர் வெங்கடேஷ்வரனை வீட்டில் அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக இருவரும் மானாமதுரைக்கு சென்றுவிட்டனர்.

திருமணத்தை பதிவு செய்வதற்காக தன்னுடைய சான்றிதழ்களை எடுக்க கடம்பூருக்கு வெங்கடேஷ்வரன் சென்றுள்ளார்.

அதன் பின் மறுநாள் மனைவியை தொடர்பு கொண்ட அவர் நீயும், உன்னுடைய அப்பாவும் கடம்பூருக்கு புறப்பட்டு வாருங்கள் என கூறியுள்ளார். இதனால் மனைவி மஞ்சுளாவும் தனது அப்பாவுடன் அங்கு சென்றுள்ளார். ஆனால் வெங்கடேஷ்வரனின் பெற்றோர் அவரை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த மஞ்சுளா, தனது கணவர் வெங்கடேஷ்வரனை கண்ணில் காட்டுங்கள் என்றும், தானும் தன் கணவரும் எங்கள் ஊருக்கே சென்றுவிடுகிறோம் என்று கூறியுள்ளார். இதற்கு வெங்கடேஷ்வரனின் பெற்றோர் செவி சாய்க்கவில்லை.


கணவரை எப்படியாவது தன்னுடன் அழைத்துச் சென்று விட வேண்டும் என்று மஞ்சுளா அவர்கள் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதை அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

அப்போது அவர் கணவரை கண் முன் நிறுத்துமாறு மஞ்சுளா பிடிவாதமாக உள்ளார். பெற்றோர் அவரை மிரட்டி மறைத்து வைத்துள்ளனர் என்று கூறி மூன்றாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இது குறித்து மஞ்சுளா கூறுகையில், கணவரை அவருடைய பெற்றோர் மறைத்து வைத்துள்ளனர். நான் தாழ்த்தப்பட்டவள் என்பதால் என்னை ஓரங்கட்டி அவருக்கு வேறு திருமணம் செய்ய முயற்சிக் கின்றனர் என்று கூறியுள்ளார்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post