டிடிவி தினகரனின் பேனர் கிழிப்பு... மன்னார்குடியில் பதற்றம்!!!

மன்னார்குடியில் டிடிவி தினகரனின் பேனர் கிழிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அதிமுக அம்மா அணியில் இருந்து டிடிவி தினகரன் நீக்கப்படுவதாக எடப்பாடி அணியினர் நேற்று தீர்மானம் நிறைவேற்றினர்.

அவரது நியமனம் செல்லாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் கட்சிக்கு எதிராக செயல்படும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

இந்நிலையில் டிடிவி தினகரனின் பேனர் கிழிக்கப்பட்டுள்ளது.

மன்னார்குடியில் அவரது ஆதரவாளர்களால் வைக்கப்பட்டிருந்த பேனர் கிழித்தெறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தினகரனின் ஆதரவாளர்களை கொதிப்படைய செய்துள்ளது. ஏற்கனவே முதல்வர் எடப்பாடியின் பேனர் கிழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post