13வது புதிய துணை ஜனாதிபதியானார் வெங்கையா நாயுடு!

நாட்டின் 13வது குடியரசுத் துணை தலைவராக வெங்கையா நாயுடு பதவியேற்றார்.

அவருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து புதிய துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு தேர்வு செய்யப்பட்டார்.

புதிய துணைக் குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் பாஜக தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வெங்கையா நாயுடுவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்கு வங்க முன்னாள் கவர்னரும், மஹாத்மா காந்தி - ராஜாஜியின் பேரனுமான, கோபால கிருஷ்ண காந்தியும் போட்டியிட்டனர்.


வெற்றி பெற்ற வெங்கையா
இந்த தேர்தலில் அதிகம் ஓட்டுகள் பெற்று வெங்கையா நாயுடு அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக அவர் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது.

13வது துணை ஜனாதிபதியாக
அதன்படி நாட்டின் 13வது துணை ஜனாதிபதியாக இன்று வெங்கையா நாயுடு பதவி பதவியேற்றார். இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் வெங்கையா நாயுடுவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தலைவர்கள் பங்கேற்பு
இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ராஜ்யசபா தலைவர்
 அவர்கள் புதிய துணை குடியரசுத் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். துணை குடியரசுத் தலைவராக பதவியேற்ற வெங்கையா நாயுடு ராஜ்யசபா தலைவராகவும் பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post