சசிகலா நான் சொன்னதை கேட்டிருந்தால் சிறையில் இருந்திருக்க மாட்டார் - டி.ராஜேந்தர் உருக்கம்!!!

நான் சொன்னபடி சசிகலா கேட்டிருந்தால், அவர் இருந்திருப்பார் குளுகுளு அறையிலே.., இன்று இருந்திருக்க மாட்டார் சிறையிலே.. என திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இயக்குநர் டி.ராஜேந்தர், அரியலூர் மாணவி அனிதாவின் மறைவையடுத்து விஸ்வரூபம் எடுத்துள்ள நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டங்கள், அரசியலில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் குதிப்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு தனது வழக்கமான பாணியில் பதில் அளித்தார்.

அப்போது, அரசியலில் கலைஞர், ஜெயலலிதாவோடு இருந்த நெருக்கம் தொடர்பாக குறிப்பிட்ட அவர், நான் சொன்னபடி சசிகலா கேட்டிருந்தால், அவர் இருந்திருப்பார் குளுகுளு அறையிலே.., இன்று இருந்திருக்க மாட்டார் சிறையிலே.. என்று குறிப்பிட்டார். 

நான் அப்பவே சொன்னேன் அந்த அம்மாவுக்கு. அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலா ஆனபோது அதை நான் எதிர்க்கவில்லை. அது அவர்கள் கட்சி பிரச்சனை. ஆனால், அவர் முதல் அமைச்சராக முயற்சி செய்தபோது நான் வேண்டாம் என்றேன். இது ஒரு சூழ்ச்சி. உங்களுக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சி, நீங்கள் அடைந்து விடுவீர்கள் வீழ்ச்சி என்று நான் கூறினேன்.

சசிகலா தமிழ்நாட்டின் முதல்வராக முடியாது என்று அனைத்து மதத்தினரும் பிரார்த்தனை செய்கிறார்கள் என நான் முன்னர் கூறினேன். என்னுடைய கணிப்பு என்ன ஜாதகமா? என்று சிலர் கேட்டனர். நான் சொன்னது ஜாதகமல்ல. சசிகலாவுக்கு சூழ்நிலை இல்லை சாதகம், அதனால் விளையும் பாதகம் என்று நான் முட்டுக்காட்டை போட்டேன்.


காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலின்போது ஜெயலலிதாவால் மதிக்கப்பட்டு அழைக்கப்பட்டு பிரசாரத்துக்கு சென்றவன் நான். அதன்பிறகு, புதுக்கோட்டை தேர்தலின்போதும் தி.மு.க. நிற்காமல் தே.மு.தி.க.வும் அ.தி.மு.க.வும் போடியிட்டபோதும் நான் பிரசாரத்துக்கு சென்றேன்.

ஜெயலலிதாவுடனும், சசிகலாவுடனும் பல காலகட்டத்தில் நட்போடு, பல விஷயத்தில் உறுதுணையாக, பக்கபலமாக, கலந்தாலோசனை செய்யும் இடத்தில் இருந்த நான், நீங்கள் கட்சியின் பொதுச்செயலாளரானதோடு இருந்து விடுங்கள். அதற்குமேல் நீங்கள் முதலமைச்சர் ஆகாதீர்கள் என நான் சொன்னபடி சசிகலா கேட்டிருந்தால், அவர் இருந்திருப்பார் குளுகுளு அறையிலே.., இன்று இருந்திருக்க மாட்டார் சிறையிலே..

இவ்வாறு அவர் கூறினார்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post