நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த தடை - சபாநாயகருக்கு அதிரடி உத்தரவு!!!

அடுத்தவாரம் புதன்கிழமை வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என்று சபாநாயகருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெற்றிவேல், ஸ்டாலின் தொடர்ந்த வழக்குகள் செப்20-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே அதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஆளுநரின் செயலர், சட்டசபை செயலரிடம் விளக்கம் பெற்று பதில் தரவும் ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஸ்டாலின் தரப்பு கோரிக்கையை ஏற்று நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஹைகோர்ட் தடை விதித்துள்ளது.


குட்கா விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யவும், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கவும் சபாநாயகர் திட்டமிட்டுள்ளதாக மனுவில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனவே நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த தடை கோரப்பட்டது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post