கூலித் தொழிலாளியான இரு பெண்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளால் நிகழ்ந்த அவலம்...!

'ஸ்வச் பாரத்' திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதாக நினைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் சர்ச்சையான காரியங்களை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

மஹாராஷ்டிராவில் உள்ள சோலாப்பூர் கிராமத்தில் ஏழை கூலித்தொழிலாளி பெண்கள் இருவர் திறந்த வெளியில் காலை கடனை முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டிற்கு கூட செல்ல விடாமல் ஐஏஎஸ் அதிகாரியான ராஜேந்திர பாருத் தலைமையிலான அதிகாரிகள் வழிமறித்துள்ளனர்.

அவர்கள் அந்த இரு பெண்களுக்கு மாலையிட்டு வரவேற்பு அளித்ததோடு போட்டோக்கள் எடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாருத் இதனை மறுத்து வருகிறார். உள்ளூர் சுயஉதவிக்குழு தான் இதுபோல நடந்து கொண்டது என தெரிவித்துள்ளார்.

இதனை அறிந்த சோலாப்பூர் தொகுதி எம்எல்ஏ பிரணிதி ஷிண்டே இச்சம்பவத்தால் கோபமடைந்துள்ளார். சம்மந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யவும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இதற்கு முன்னதாக ஜார்கண்ட் மாநிலத்தில் திறந்தவெளியில் மலம் கழித்ததால் ஆண்கள் சிலரின் லுங்கிகள் அவிழ்க்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post