டெங்குவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சைக்காக 2,000 ரூபாய் - அரசு அறிவிப்பு!!

டெங்குவால் பாதிக்கப்பட்டோருக்கு முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சைக்காக தினமும் ரூ. 2000 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெர்வித்துள்ளார்.

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. டெங்குவை கட்டுப்படுத்தும் நோக்கில் கொசு உற்பத்திக்கு உதவும் விதத்தில் தேவையற்ற பொருட்கள் இருந்தால் 48 மணி நேரத்தில் அவற்றை அகற்றி விட வேண்டும் என வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அப்படி அகற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 6.23 கோடி மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள நாள் ஒன்றுக்கு ரூ. 2000 உதவித்தொகையாக முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்படும். முன்னர் நோய் உள்ளது என உறுதியானால் தான் வழங்கப்பட்டது. தற்போது டெங்கு பாசிடிவ் என சோதனையில் தெரிந்தாலே, இந்த உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post