18 வயதுக்கு கீழ் உள்ள மனைவியுடன் உறவு கொண்டாலும் அது பலாத்காரம் தான் - சுப்ரீம் கோர்ட்!!!!

உலக அளவில் குழந்தை திருமணங்கள் குறித்து ஆய்வு அறிக்கையை ஐ.நா.சபை அவ்வபோது வெளியிட்டு வருகிறது.

கடந்த முறை சர்வதேச அளவில் சிறுமிகள் திருமணம் நடைபெறும் 10 நாடுகள் பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் இருந்தது.

தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளதாக ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது. 

தன்னார்வ தொண்டு  நிறுவனம் ஒன்று  குழந்தை திருமணத்தை தடுப்பது தொடர்பாக  சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு  தொடர்ந்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.


குழந்தை  திருமணத்தை தடுப்பது தொடர்பான  தீர்ப்பில்  இன்று சுப்ரீம் கோர்ட் 18 வயதிற்குட்பட்ட சிறுமியை மணந்து மனைவியுடன்  உறவு கொள்வது பாலியல் வன்கொடுமையே.

திருமணமாகி 1 வருடத்திற்குள் பெண் புகாரளித்தால் அது வன்கொடுமையாக கருதப்படும் என கூறி உள்ளது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post