நேற்றுடன் பரோல்' முடிவடைந்தது: சசிகலா இன்று பெங்களூரு பயணம்!!!!

உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரை பார்ப்பதற்காக, பெங்களூரு சிறையில் இருந்து 5 நாள் பரோலில் வந்துள்ள அவருடைய மனைவியும், அ.தி.மு.க. அம்மா அணி பொதுச்செயலாளருமான சசிகலா தியாகராயநகரில் உள்ள இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கியுள்ளார்.

தினமும் அவர் தனது கணவரை ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்து வந்தார். சசிகலாவுக்கு வழங்கப்பட்ட பரோல் நேற்றுடன் முடிவடைந்தது.


பரோல் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைசாலைக்கு சசிகலா புறப்பட்டு செல்கிறார்.

அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப்பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் அவருடைய உறவினர்களும் இன்று பெங்களூரு சென்று சசிகலாவை விட்டு வர செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post