நான் தான் கலவரத்தை தூண்டினேன்; என்ன இப்போ: பாலியல் சாமியார் மகள் ஒப்புதல்!!!

பஞ்சாப், ஹரியானாவில் கலவரத்தை தூண்டுவதற்கு முக்கிய காரணமாக செயல்பட்டதாக செக்ஸ் சாமியார் மகள் ஹனிபிரீத் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் புகழ்பெற்று விளங்கியவர் குர்மீத் ராம் ரகீம் சிங். இவர் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர். இதற்கிடையில் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, குர்மீத் ராம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார்.

இதுதொடர்பான தீர்ப்பு வெளியானதும், அவரது ஆதரவாளர்கள் பஞ்சாப், ஹரியானாவில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். இதில் 35க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். பேருந்துகள் எரிக்கப்பட்டன.

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. கலவரம் தொடர்பாக 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சாமியாரின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத்தை தேடி வந்தனர்.


தலைமறைவாக இருந்த அவர், கடந்த 3ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சாமியாரின் கார் ஓட்டுநர் ராகேஷ் குமாரிடம் விசாரணை மேற்கொண்டதில், பஞ்சாகுலா மாவட்ட தலைவர் சம்கவுர் சிங்கிடம் ரூ.1.25 கோடி பணத்தை ஹனிபிரீத் கொடுத்ததாக கூறியுள்ளார்.

அதன்மூலம் வன்முறை சம்பவங்களை கட்டவிழ்த்துவிட உத்தரவிட்டதாக ஓட்டுநர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கலவரத்தை தூண்டும் வகையில் நடந்து கொண்டதாக ஹனிப்ரீத் ஒப்புக் கொண்டுள்ளார். இதற்கிடையில் ஹனிபிரீத்தின் போலீஸ் காவல், வரும் 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post