தனது கணவனுக்காக மனைவி கட்டிய படிக்கிணறு: வியப்பூட்டும் சிறப்புகள் இதோ!!!

குஜராத் மாநிலத்தில் சோலாங்கி வம்சத்தைச் சேர்ந்த முதலாம் பீம்தேவ் மன்னரின் நினைவாக அவருடைய மனைவி ராணி உதயமதியால் படிக்கிணறு கட்டும் வேலைகள் தொடங்கப்பட்டது.

அதன் பின் இவர்களுடைய மகன் முதலாம் கர்ணதேவ் மூலம் இந்த படிக்கிணறு கட்டி முடிக்கப்பட்டது.

64 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலம் 27 மீட்டர் ஆழம் கொண்ட இந்த படிக்கிணறு, 7 அடுக்குகளாகக் கட்டப்பட்டுள்ளது.

கடைசிப் படிக்கட்டுக்குக் கீழே 30 கி.மீ நீளமுள்ள சுரங்கப் பாதை சித்பூருக்குச் செல்லுமாறு அமைந்துள்ளது. இந்த அமைப்பு போர்க் காலங்களில் அரச குடும்பத்தினர் தப்பிச் செல்வதற்காகக் கட்டப்பட்டது.

கி.பி 1063-1068 வரை இந்த படிக்கிணற்றைக் கட்டியிருக்கிறார்கள். ஆனால் காலப்போக்கில் இந்தப் படிக்கட்டு கிணறு கற்களாலும் மணலாலும் மூடப்பட்டு விட்டது.

இதன் காரணமாக நீண்ட காலம் மக்களுக்கு இந்தப் படிக்கிணறு பற்றித் தெரியாமலே போய்விட்டது. அதன் பின் 1960-ல் தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கு விடப்பட்டது.


படிக்கட்டு கிணற்றின் சிறப்புகள்?

படிக்கட்டு கிணற்றில் விஷ்ணுவின் தசாவதாரங்கள், புத்தர், முனிவர்கள், நாகக் கன்னிகைகள், கண்ணாடியைப் பார்த்து பொட்டு வைக்கும் பெண், யானைகள் போன்ற 800-க்கும் மேலான சிற்பங்களை பக்கவாட்டுச் சுவர்களில் கலை நயத்துடன் செதுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் தூண்கள், கிணற்றுக்கு செல்லும் படிக்கட்டுகள் நேராக இல்லாமல் பக்கவாட்டில் ஏறவும், இறங்கவும் வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த படிக்கிணறு மழை நீரைச் சேமிக்கும் இடமாக 700 கிணறுகள் வரை இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இதுவரை 120 படிக்கிணறுகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post