தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்தே தீரும்... முதல்வர் ஓபிஎஸ் அதிரடி அறிக்கை...!

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கைவிரித்த சூழலில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அவர் உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டு நிச்சயம் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளா

மத்திய அரசு கைவிரித்துள்ள போதும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு எள்ளளவும் பின்வாங்காது என்றும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக 5 பக்க அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.

அதில் ஜல்லிக்கட்டுக்கு ஏன் தடை வந்தது என்ற காரணங்களையெல்லாம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்கும், தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் நிச்சயம் காக்கப்படும் என்றும், தமிழர்களின் கலாசாரம்,பண்பாடு கட்டிக்காக்கப்படும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எள்ளளவும் தமிழக அரசு பின்வாங்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post