புது ரூபா நோட்டு தான் வரல... அதுக்குள்ள சேலை வந்துருச்சி.. களை கட்டும் வியாபாரம்...!

பழை ரூபாய் நோட்டுக்களான ரூ.500 மற்றும் ரூ.1,000 செல்லாது என பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். இதனைத்தொடர்ந்து நாட்டில் கடும் பணத்தட்டுப்பாடு இன்றுவரை நிலவிவருகிறது. தற்போதுதான் முக்கிய நகரங்களில் இயல்பு நிலை திருப்பியுள்ளது. இன்னும் ஏராளமான கிராமங்களில் பணத்தட்டுப்பாடு குறையவில்லை.

இந்நிலையில், பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி, தமிழகத்தில் விற்பனை செய்ய ரூ.2,000 நோட்டு டிசைகள் கொண்ட சேலையை சூரத் நிறுவனம் தயாரித்து விற்பனைக்கு விட்டுள்ளது.



தற்போது இந்த புதிய ரூபாய் நோட்டு டிசைன் சேலைகளை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர். ‘‘புதிய ரூபாய் நோட்டுதான் புழக்கத்துல வரலை.. புதிய ரூபாய் நோட்டு சேலையாவது வாங்குவோம்’’ என பொதுமக்களின் ஆதங்கக்குரல் ஒரு பக்கம் எதிரொலிக்கத்தான் செய்கிறது.





Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post