உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி - 4 மூட்டைகளில் பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்கள்...!

உயர் மதிப்புடைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்களை அறிமுகம் செய்தது. பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து டிசம்பர் 31 ஆம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இதற்கான காலகெடுவும் முடிவுக்கு வந்த நிலையில், செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் தாள்களை கட்டுகட்டாக வைத்திருப்பவர்கள் இனி அபராத தொகை செலுத்த வேண்டி இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால், சிலர் தங்களிடம் இருந்த செல்லாத நோட்டுக்களை குப்பைகளில் கொட்டியும், எரித்தும், கிழித்தும் அப்புறப்படுத்தினர். இதற்கிடையில் உத்தரப்பிரதேச மாநிலம் உன்னோ பகுதியில் நேற்று 4 சாக்குபைகளில் கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர்.


அதனை சோதனை செய்த போது, முழுவதும் செல்லாத ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் கிழிக்கப்பட்டு இருந்ததை அறிந்தனர். அவற்றை பறிமுதல் செய்து, காவல்துறையினர் எடுத்துச்சென்றனர். இவற்றை குப்பைத்தொட்டிகளில் வீசி விட்டு சென்றது யார் என்பது குறித்து போலீசார் திவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post