உடலுறவில் பெண்கள் அசௌகரியமாக உணரும் 9 விஷயங்கள்!

என்ன தான் தம்பதிகளாக இருப்பினும், சில விஷயங்களை பொறுத்துக்கொள்ள முடியாது, சிலவன அசௌகரியமாக இருக்கும்.

எனவே, துணை தான் அதை அறிந்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், பெண்கள் சிலவற்றை வெளிப்படியாக கூறவும் முடியாமல், பொறுத்துக்கொள்ளவும் முடியாமல் தவிக்கலாம்.

குறிப்பாக கணவன் என்ற உரிமை இருக்கிறது என நீங்கள் அவர்களது அனுமதியின்றி உறவில் ஈடுபடுவதில் இருந்து, படுக்கையில் அவர்கள் அசந்து உறங்கிக் கொண்டிருக்கும் போது தீண்டுவது வரை பல விஷயங்களை பெண்கள் அசௌகரியமாக உணர்கின்றனர் என்பதை கணவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

 எனவே, மனைவியாக இருப்பினும், கணவன் என்ற உரிமை இருப்பினும், அவர்கள் எந்தெந்த விஷயத்தை எப்படி உணர்கிறார்கள் என கணவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்...

விஷயம் # 1
உறங்கிக் கொண்டிருக்கும் போது, நீங்கள் எதற்கு நெருங்குகிறீர்கள் என எங்களுக்கு தெரியும். எனவே, நாங்கள் அசந்து உறங்கும் போது சில்மிஷ வேலைகளில் ஈடுபட வேண்டாம்.

விஷயம் # 2
காலை எழுந்ததும் முத்தமிட்டுக் கொள்வதில் தவறே இல்லை. ஆனால், வாய் துர்நாற்றத்துடன் லிப் லாக் எல்லாம் வெளியே கூற முடியாத அசௌகரியம்.

விஷயம் # 3
தாங்கள் விரும்பாத போதிலும் கூட வற்புறுத்தி உறவில் ஈடுபடுவதும். உறவில் மட்டுமல்ல, சில தீண்டுதல் மற்றும் கொஞ்சுதலை கூட தாங்கள் விரும்பாத போது செய்வது அசௌகரியமாக தான் உணர்கிறோம் என பெண்கள் கூறுகின்றனர்.

விஷயம் # 4
சிலசமயங்களில், நன்கு உறங்கிக் கொண்டிருக்கும் போது, கீழே கூட தள்ளி விடுவது போல தங்களை படுக்கையின் ஒருபக்கமாக ஒதுக்கிக் கொண்டே வருவது.

விஷயம் # 5
 முடி உதிர்தல்! படுக்கை, தலையணை, போர்வை என அனைத்திலும் முடி உதிர்தல், பொடுகு போன்றவற்றை காணும் பொது சற்று அசௌகரியமாக தான் இருக்கும்.

விஷயம் # 6
தினமும், உறவில் ஈடுபட வேண்டும், அல்லது கொஞ்சி குலாவ வேண்டும் என நினைக்க வேண்டாம். எங்கள் உடல் நிலை மற்றும் ஒத்துழைப்பு இருந்தால் தான் ஈடுபட முடியும்.


விஷயம் # 7
 என்ன தான் பிடித்த நபராக, அன்பிற்குரிய நபராக இருப்பினும், எங்கள் தலையணை மீது உருண்டு வந்து எங்கள் தூக்கத்தை கெடுப்பது தவறு தான்.

விஷயம் # 8
இருவரும் விடாப்படியாக சண்டயிட்ட பிறகு, ஒரே போர்வைக்குள் தூங்குவது அசௌகரியமாக இருக்கும்.

விஷயம் # 9
ஒவ்வொரு முறை என் கணவர் குறட்டை விட்டு என் உறக்கத்தை கெடுக்கும் போதும் பளார் என கன்னத்தில் வைக்க வேண்டும் என தோன்றும்.
 

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post