கூட்டு குடும்பத்திலும் உடலுறவில் சிறக்க 5 வழிகள்!!

திருமணம் முடிந்து தேன்நிலவு எல்லாம் முடிந்துவிட்டதா? திருமண கொண்டாட்டங்கள் மற்றும் தேன்நிலவு சந்தோஷம் எல்லாம் முடிந்த பின்னர் நீங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டியிருக்கும்.

அதுவும் உங்கள் வீடு இரண்டிற்கும் மேற்பட்டவர்கள் உள்ள கூட்டுக்குடும்பமாக இருந்தால் உங்களால் துணையை நினைத்த போது எல்லாம் கொஞ்ச முடியாது.

திருமண வாழ்க்கையில் தாம்பத்தியம் என்பது முக்கியமானது. என்ன தான் கூட்டுக்குடும்பமாக இருந்தாலும் உங்கள் துணையை காதலிக்க வேண்டியது அவசியம்.

 நான்கு அல்லது ஐந்து பேர் இருக்கும் வீட்டில் காதலுக்கு நேரம் ஏது என நினைக்கிறீர்களா? கட்டாயம் இருக்கு... இத படிச்சு தெரிஞ்சுகங்க...

மனம் விட்டு பேசுதல்
ஒவ்வொரு உறவிலும் உரையாடல் என்பது கட்டாயம் இருக்க வேண்டும். தவறான புரிதலுக்கு சற்றும் இடம் கொடுக்க கூடாது. கூட்டுக்குடும்பம் என்கின்ற போது பலர் இருப்பார்கள். அவர்களில் யாரும் கணவன் மனைவி உறவில் சண்டையை ஏற்படுத்திவிடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் தனக்கு ஏற்படும் பிரச்சனைகளை பெரிதாக கணவனிடம் கூறாமல், உள்ளதை உள்ள படி கூற வேண்டியது அவசியம். இதனால் உங்கள் உறவிற்கு வேறு யாரும் தலையிட முடியாது. இருவரும் தங்களது எண்ணங்களை பகிந்து கொள்வதற்கு பெயர் தான் உரையாடல். கணவனிடம் ஒரு பிரச்சனையை மனைவி கூறினால் அதற்கு கணவன் உரிய தீர்வை வழங்க வேண்டும். மனைவி தானே பேசிக்கொண்டிருக்காமல், கணவனையும் பேச விட வேண்டும்.


குடும்ப உறுப்பினர்களிடம் பேசுதல்
 தம்பதிகள் மட்டுமே தங்களுக்கான தனிமைக்கான முயற்சியை எடுக்க கூடாது. குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களும் அவர்களது சூழ்நிலையை புரிந்து கொண்டு கணவன் மனைவிக்கான சுதந்திரத்தை தர வேண்டும். ஒருவேளை உங்களுக்கான சுதந்திரம் கிடைக்கவில்லை என்றால் அதனை அமைதியான முறையில் கேட்டு பெறலாம். கணவன், மனைவியின் தனிப்பட்ட விஷயங்களில் குடும்ப உறுப்பினர்கள் தலையிடுவதை தவிர்க்க வேண்டும்.

வெளியில் செல்லுதல்
கணவன் மனைவி இருவரும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை தனிமையில் கழிப்பது அவசியம். இதற்காக வருடத்தில் ஒருமுறை அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது வெளியிடங்களுக்கு சென்று தனிமையில் இருவரும் இருக்கலாம்.

காலை குளியல்
கூட்டுக்குடும்பத்தில் இருக்கும் போது ஒவ்வொன்றையும் தயங்கி தயங்கி தான் செய்ய வேண்டும். கிடைக்கும் சின்ன சின்ன நேரங்களை உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக கழிக்க பழகிக்கொள்ளுங்கள். காலையில் குளிக்கும் போது இருவரும் ஒன்றாக குளியுங்கள்.

உடலுறவின் போது பாடல்
 உடலுறவின் போது பின்னனியில் பாடலை ஒலிக்கவிடுங்கள். இது உடலுறவின் போது நீங்கள் எழுப்பும் சத்தம் வெளியில் கேட்காமல் இருக்க உதவும்.

உடலுறவுக்கான நேரம்
வீட்டில் உள்ள அனைவரும் தூங்கிய உடன் உடலுறவு வைத்துக்கொள்வது சிறந்தது.

இங்கு இதை பேச வேண்டாம்!
படுக்கை அறையில் குடும்ப பிரச்சனைகளையோ அல்லது உடலுறவிற்கு முந்தைய பேச்சுகளையோ பேச வேண்டாம். மாடியில் அல்லது வீட்டின் வெளியில் நடைபோட்டுக்கொண்டே பேசுங்கள்.

நண்பர்கள் இருக்க கவலை ஏன்?
உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்களை தனிமையில் இருக்க விடவில்லை என்றாலும், உங்களை புரிந்து கொள்ளவில்லை என்றாலும், உங்கள் நண்பர்கள் இருக்கிறார்கள். கவலைப்படாதீர்கள்! கணவன் மனைவி இருவரும் தனிக்குடித்தனம் இருக்கும் நண்பர்கள் உங்களுக்கு இருந்தால், அவர்கள் ஊருக்கு அல்லது வெளியிடங்களுக்கு செல்லும் போது உங்கள் நண்பர் வீட்டில் சென்று உங்கள் மனைவியுடன் இருங்கள்.

ஏன் தாம்பத்தியம் அவசியம்?
 தாம்பத்தியம் என்பது திருமண உறவில் மிகவும் முக்கியமானது. கணவன் மனைவிக்குள் நெருக்கத்தை உருவாக்குவது. உங்கள் வருங்காலங்களை வலிமையாக்குகிறது. எனவே கணவன் மனைவி உறவுக்கு நேரம் ஒதுக்குவது அவசியம்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post