உறவின் போது ஆணுறை கிழிந்துவிட்டால் ஆபத்தா? - அதற்கு என்ன செய்ய வேண்டும்!!!!

தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்கவும், தொற்றுக்களில் இருந்து விடுபடவும் உடலுறவின் போது தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்கிறீர்கள், இருப்பினும் சில சமயங்களில் உடலுறவின் போது ஆணுறை கிழிந்துவிடுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனை பலர் உணர்ந்து இருப்பீர்கள்.

இவ்வாறு உடலுறவின் போது ஆணுறை கிழிந்துவிட்டால் அந்த பாதுகாப்பற்ற தருணத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

ஆணுறை
 உடலுறவின் போது உண்டாகும் தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்கவும், நோய் தொற்றுக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவும் ஆணுறையை பயன்படுத்துகிறீர்கள். ஆணுறை ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் தனித்தனியாக கிடைக்கிறது. ஆனால் ஆணுறையை ஆண்கள் பயன்படுத்துவது தான் பாதுகாப்பான ஒரு தீர்வாக உள்ளது.

வரும் முன் காத்தல்
 வரும் முன் காத்தல் என்பது இதற்கும் பொருந்தக்கூடிய ஒன்று தான். எதிர்பாராத விதமாக ஆணுறை கிழிந்து பிறகு என்ன செய்வது என்று யோசிப்பதை விட அவ்வாறு நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று சிந்தித்து செயல்படுவது தான் சிறந்தது. உங்களது ஆணுறுப்பின் அளவுக்கு பொருத்தமான ஆணுறையை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். இவை சந்தைகளில் பலதரப்பட்ட அளவுகள் மற்றும் நறுமணங்களில் கிடைக்கின்றன. இதில் உங்களுக்கு பொருத்தமானதை வாங்கி பயன்படுத்துங்கள்.

அளவு மற்றும் நண்பகத்தன்மை
ஆணுறை வாங்கும் போது அதன் அளவு மற்றும் நண்பகத்தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியம். மேலும் இவை பல்வேறு தரங்களிலும் கிடைக்கின்றன.

விரிசல் உண்டாகிவிட்டால்?
 நீங்கள் உடலுறவில் ஈடுபடும் போது ஏதேனும் மாற்றம் தெரிந்தால், உடனடியாக உடலுறவை நிறுத்திவிட்டு உங்களது ஆணுறையை சோதித்துப்பாருங்கள். நீங்கள் உடலுறவின் மீது உள்ள ஆர்வத்தில் இந்த விஷயத்தை கவனிக்காமல் இருப்பது முற்றிலும் தவறு.

உடனடியாக இதை செய்ய வேண்டும்!
உங்களது துணையால் ஆணுறையில் உள்ள விரிசலை கண்டிபிடிப்பதற்கு முன்பாக நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், கழிப்பறைக்குள் சென்று நன்றாக 'புஷ்' செய்து விந்தணுக்களை வெளியேற்ற முயற்சி செய்ய வேண்டும். விந்தணு வெளியேறவில்லை என்றால் சில தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் நன்றாக புஷ் செய்து பின்னர் பெண்ணுறுப்பை சுத்தமான நீரால் கழுவி விட வேண்டும்.


பயம் வேண்டாம்
 இது பயத்திற்குரிய விஷயம் தான் இருப்பினும் நீங்கள் பயம் கொள்ளாமல் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். பயம் கொள்வதால் விந்தணு உள்ளே சென்று விட வாய்ப்புகள் அதிகம். எனவே ரிலாக்ஸாக இருங்கள்.

 ரீலாக்ஸ் செய்யுங்கள்
நீங்கள் முதுகுப்புறமாக திரும்பிப்படுத்து உங்களது துணையின் உதவியுடன் "புஷ்' செய்யுங்கள். விந்தணு உடனடியாக வெளியேறவில்லை என்றால் பயம் கொள்ள தேவையில்லை. தேனீர் குடியுங்கள். இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் இதே போன்று முயற்சி செய்யுங்கள். அப்போதும் வெளியேறவில்லை என்றால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுங்கள்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post