இந்தப் பிரச்சனை ஓவியாவுக்கு மட்டுமா? உங்களுக்கு இல்லையா..?

நம் மனசு பொல்லாதது. எதையாவது நினைத்து சந்தோசப்படும் நம்மை உற்சாகமாக வைத்திருக்கும் அதே நேரத்தில் நெக்கட்டிவ்வான விஷயங்களை நினைத்து நம்மை நிலை குழையச் செய்திடும்.

நாம் நேசித்த ஓர் நபர் நம்மை உதாசீனம் செய்வதையோ அல்லது தவிர்ப்பதையோ நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.அவர்கள் எரிச்சல் அடைகிறார்கள் என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் அந்நபரை நோக்கியே நம் செயல்கள் இருக்கும்.

தொந்தரவு செய்ய வேண்டும் என்று எண்ணமல்ல எப்படியாவது அவர்கள் நம்மை கண்டுகொள்ளமாட்டார்களா நம்மிடையே பேசிட மாட்டார்களா என்ற ஏக்கமும் தவிப்பும் தான் காரணம்.

மனதளவில் உறுதியான பெண்ணாக இருக்கும் ஓவியா ஆரவிடம் குழைகிறார். எத்தனை முறை தவிர்த்தாலும் மீண்டும் மீண்டும் அவரிடமே வாலாட்டுகிறார். நேற்றைய நிகழ்விலேயே உன் கவனத்தை ஈர்க்கவே இப்படியெல்லாம் நடந்து கொண்டேன் என்று சொல்கிறார்.

ஆரவுக்கு தன் மேல் காதல் இல்லை என்று தெரிந்ததுமே எமோஷனலாகும் ஓவியா, சில நிமிடங்களிலேயே எல்லம் புரிந்தது. வாழ் நாளில் திரும்ப வந்துவிடாதே... யாருக்கும் இரண்டாம் வாய்ப்பு கிடையாது என்று முகத்திற்கு நேராக சொல்லிவிடுகிறார். ஓவியாவிடமிருந்து வார்த்தைகளாக வந்துவிட்டாலும் மனதளவில் நேசித்தவரை மறப்பது சற்று சிரமம் தான். இப்பிரச்சனை ஓவியாவுக்கு மட்டுமல்ல நமக்கும் இருக்கிறது. நமக்கு மிகவும் பிடித்த நபரை மறக்க, அவரை நினைக்காமல் இருக்க உங்களுக்காக சில யோசனைகள்.

நம்முடைய சந்தோஷத்திற்காக பிறரை சங்கடப்படுத்துவது தவறானது, ஒவ்வொருவரின் சூழல்களும் விருப்பங்களும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும் என்று எதிர்பார்ப்பதை தவிர்த்திடுங்கள். வர்புறுத்தி வரச்செய்யும் காதல் நிலைத்திடவும் செய்யாது என்பதால் விலகுவது தான் நன்று.

ஒரு பக்கம் சார்ந்து மட்டுமே யோசிக்காதீர்கள். இணை மீது எத்தனை அன்பு வைத்திருந்தேன் தெரியுமா? அந்நபரைத் தவிர வேறு யாரையும் நான் நேசிக்க முடியாது என்று உங்களைப் பற்றி மட்டுமே நினைக்காமல் உங்கள் இணையின் சூழல்களை புரிந்து கொள்ள முயற்சி செய்திடுங்கள்.


அதைப் பற்றி நான் நினைக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்காமல், நீங்கள் நேசித்த நபரைப்பற்றியும் இனி அந்நபர் நமக்கானவர் இல்லை என்பதையும் உணருங்கள். தவிர்த்தால் மீண்டும் மீண்டும் எதாவது முயற்சி செய்து அவர் மனதை மாற்றிவிடலாமா என்று தான் எண்ணத்தோன்றும்.

நாம் நேசித்த நபருடனான உறவு பிரிந்தவுடன் அவரை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று அர்த்தமல்ல . மனதலிருந்து அழித்தெடுக்கவும் முடியாது. அதனால் அதனை வீம்பாக முயற்சிக்காமல் அதனை மறக்கும் அளவிற்கு மீண்டும் பழைய காதல் நினைவுகள் மனதில் எழாத வகையில் உங்களை பிஸியாக வைத்துக் கொள்ளுங்கள்.

இந்தக் காதல் முடிவிட்டது. இனி காதலே வேண்டாம். காதல் பொய்யானது, எல்லாரும் ஏமாற்றுக்காரர்கள், நான் ஏமாந்துவிட்டேன் என்று தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல் கவனத்தை திசை திருப்பிக் கொள்ளுங்கள். உங்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களை தேடித்தேடி செய்திடுங்கள், பயணங்கள்,இசை, புத்தகம் என எதிலாவது ஐக்கியமாகிடலாம்.

பிரிவுக்குப் பின் காதலித்த நபர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார். அவர் இன்னமும் என்னை நினைக்கிறாரா என்று அவரை பின் தொடர்வதை விட்டுவிடுங்கள். முக்கியமாக சமூகவலைதளங்களில் கண்காணிப்பதை தவிர்த்திடுங்கள்.

அவர் எதைச் செய்தாலும் நமக்கானது என்று எடுத்துக் கொள்வதால் தான் மேலும் மேலும் பிரச்சனைகள் உருவாகின்றன.

காதலில் உடல், பொருள்,ஆவி என எதை வேண்டுமானாலும் இணைக்காக விட்டுக் கொடுக்கலாம் என்று இருக்காதீர்கள். உங்களுக்கும் உங்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளியுங்கள். உங்களை பிறர் ஆட்டுவிக்க விடாதீர்கள். உங்களின் சந்தோஷமும் துக்கமும் உங்களிடம் தான் இருக்க வேண்டும்,பிறர் நம்மை வந்து கொண்டாட வேண்டும் என்று நினைப்பதை விட நம்மை நாமே கொண்டாடுவது மிகவும் முக்கியம்.

நேசித்த நபரை மறக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது ரொமாண்ட்டிக்கான படங்கள், பாடல்கள் போன்றவற்றை தவிர்த்திடுங்கள். சேர்ந்திருந்த போது நீங்கள் ரசித்த விஷயங்கள், வெறுத்த விஷயங்கள் என உங்கள் பழைய காதலரை நினைவுகூறும் விஷயங்களை சில காலங்களுக்கு தவிர்த்திடுங்கள்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post