மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா..?

மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வது ஆபத்தானது என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் நிறைய மக்கள் மாதவிடாய் காலத்தில் கட்டுப்பாடு இல்லாமல் உடலுறவில் ஈடுபடுகின்றனர் மற்றும் அவர்களுக்கு எந்த ஒரு தீவிரமான பிரச்சனையும் ஏற்படவில்லை.

அதாவது மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதால் எந்த ஒரு ஆபத்தும் ஏற்படவில்லை என்பதை மறைமுகமாக கூறுகின்றனர்.

இருந்தாலும், மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா என்று கேட்டால், பாதுகாப்பானது என்று தான் கூறுவோம்.

அதுமட்டுமின்றி, மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அவை என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

உண்மை #1
ஆரோக்கியமான தம்பதிகள் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், உயிருக்கு ஆபத்து ஏற்படும்படியான எந்த ஒரு அபாயமும் ஏற்படாது.


உண்மை #2
மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், அதுவும் இருவரும், ரிலாக்ஸாகவும், உறவில் ஈடுபடும் மனநிலையிலும் இருந்தால், எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று பெண்ணியல் மருத்துவர்களும் கூறுகின்றனர்.

உண்மை #3
உடலுறவின் போது உடலில் இரத்த ஓட்டம் மேம்படுவதால், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி போன்றவை குறையும். அதுவும் உச்சக்கட்ட இன்பத்தை அடைந்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

உண்மை #4
உச்சக்கட்ட இன்பத்தை அடைந்த பின், எண்டோர்பின்கள் வெளியேறுவதால், மனநிலை மேம்பட்டு, மாதவிடாய் காலத்தில் மனநிலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் குறையும்.

உண்மை #5
மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது, உச்சக்கட்ட இன்பத்தை அடைந்த பின் மூளையில் இருந்து வெளியேறும் ஒருவித கெமிக்கல்கள் வலி நிவாரணி போன்று செயல்பட்டு, தலைவலி, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் குறையும்.

உண்மை #6
மாதவிடாய் காலத்தில் எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. சொல்லப்போனால், மாதவிடாய் காலத்தில் பெண்களின் பாலுணர்ச்சி அதிகம் இருக்கும்.

உண்மை #7
ஆய்வு ஒன்றில் பெரும்பாலான பெண்கள் முன்விளையாட்டுக்களில் ஈடுபடாமலேயே விரைவில் பாலுணர்ச்சி தூண்டப்படுவதாக தெரிவித்துள்ளனர் என்றால் பாருங்கள்

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post