கல்யாணமானவங்க மட்டும் இதை படிங்க: மத்தவுங்க வேண்டாம் ப்ளீஸ்!!!

கட்டுன புருஷனாவே இருந்தாலும் ஒரு சில விஷயங்களை பொண்டாட்டிகிட்ட கேக்க கூடாது.

அது மாதிரி கேக்குறது 'வேலில போற ஓணானை புடிச்சு வேஷ்ட்டிக்குள்ள விட்ட கதையா' தான் இருக்கும்.
அதுல ஒருசில கேள்விகளை தான் பாக்க போறோம்.

"நீ கொஞ்சம் வெயிட்டு போட்டுட்ட போல...?"இந்த கேள்வியை தப்பி தவறி கூட கேட்டுராதிங்க, அப்பறம் ரொம்ப வருத்தப்படுவீங்க.

"அட இவன ஏன்டா கல்யாணம் பண்ணோம்-னு என்னிக்காவது கவலை பட்டதுண்டா?

"இந்த கேள்விய ஜென்மத்திற்கும் கேட்டுவிட வேண்டாம். அப்புடி கேட்டிங்கனா இந்த கேள்வியை கேட்ட கொஞ்ச நாள்ல உங்க மனைவி இதையே பதிலா சொல்லுவாங்க.

"நீ என்ன எப்பவாவது ஏமாத்தி இருக்கியா?"

இந்த கேள்வி கேக்குறது குடும்பத்துல குண்டு போட்ட மாதிரி. கொஞ்ச நேரத்துல பெரிய பூகம்பமே வந்துரும்.
"அதுல நான் கில்லியா? உனக்கு ஓகே வா...?

"இதுபோன்ற 18+ கேள்வியை கேட்டால் நிச்சயம் உங்கள் மானம் போய்விடும். அவர்கள் விளையாட்டிற்கு கூட வேறு யாரவது பெயரை கூறிவிட வாய்ப்புண்டு.


"கோபமா இருக்கியா?"மனைவிக்கு பிடிக்காத ஒன்றை செய்துவிட்டு, அவர் ருத்ர தாண்டவம் ஆடும்பொழுது கோவமா இருக்கியா என்பது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல.

"உங்க அப்பா, அம்மா வீட்டுக்கு போயே ஆகணுமா? "இந்த கேள்விய தைரியமா கேட்டுருவீங்கன்னா உங்களுக்கு நீங்களே சபாஷ் போட்டுக்குங்க.

ஆனா ஒன்னு, இந்த கேள்விய அவங்க ரொம்ப தைரியமா, அசால்ட்டா கேட்பாங்க...

"எதுக்கு நீ இவ்வளோ மேக்கப் பண்ற...?

"இந்த கேள்வியை கேட்ட உடனே நெருப்பை பத்தவச்ச மாதிரி எரிய ஆரம்பிச்சுருவாங்க.

 "இல்ல சாதாரணமாவே அழகா தானே இருக்க.. எதுக்கு அழகுக்கு அழகுசாதன பொருட்கள்..." இதுமாதிரி சொல்லி சமாளிச்சுக்கிருங்க.

"நான் என் பிரண்ட்ஸ் கூட வெளிய போயிட்டு வரட்டா?

"அதென்னமோ தெரியல, நம்ம பிரண்ட்ஸ கண்டாலே ஏதோ தீவிரவாதி மாதிரி பாக்குறாங்க..

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post