ஆண்களை எப்படியெல்லாம் பெண்கள் மூட்வுட் செய்கிறார்கள் தெரியுமா..?

பெண்கள் ஆண்களின் மகிழ்ச்சியை போக்கி, மூட் அவுட் செய்வதற்காகவே சில இரகசியங்களை கைவசம் வைத்திருப்பார்கள்.

ஒரு வார்த்தை மூலம் ஆண்களை பெண்கள், எப்படியெல்லாம் மூட்வுட் செய்கிறார்கள், அதை கையாளுவதற்கு அவர்கள் கைவசம் இருக்கும் இரகசியங்கள் என்ன என்பதைத் தான் இப்போது பார்க்க போகிறோம்.

ஹ்ம்ம்..!
காதலர்கள் தங்கள் ஆரம்பகால காதல் நாட்களில் அதிகம் பயன்படுத்திய சொல் இதுவாகத்தான் இருக்கும். ஆனால் போக போக அதுவே பெரிய சண்டைக்கு காரணமாக போய்விடும். ஹ்ம்ம்-க்கு என்ன அர்த்தம் என்பதை கணவனோ,காதலனோ புரியாமல் அவர்களை சீண்டினால் அவ்ளோதான்..!

ஒன்னுமில்லையே.!
இப்பிடி உங்கள் காதலியோ இல்லை மனைவியோ சொன்னால் நிச்சயம் ஏதோ ஒன்று இருக்கிறது என்று அர்த்தம். உடனே அது என்ன என்பதை கண்டறிந்து நீங்கள் சரி செய்யாவிட்டால் நீங்கள் தொலைந்தீர்கள்.

இன்னுமா..!
சொல்லவே வேண்டாம்..!உங்கள் மனைவி ஒரு இடத்திற்கு செல்ல புடவை மேக் அப் என்று பாதி நாள் செலவழித்து ரெடியாவர்கள்.. ஆனால் நீங்கள் என்றாவது ஒரு நாள் அதிசயமாக லேட்டாகும் போது இன்னுமா கிளம்புறீங்கனு ஒரு வார்த்தையில மூட் அவுட் ஆக்கிடுவாங்க..!


இந்த டிரஸ் நல்லா இருக்கா.!
ஒருவேளை நீங்க உங்க ஆளோட, இல்ல மனைவியோட ஷாப்பிங் போனா ஒரு 10,15 டிரஸ் எடுத்துட்டு வந்து இதுல எது நல்லா இருக்குனு கேட்பாங்க..!நீங்களும் தேடி பாத்து ஒரு டிரஸை எடுத்து கொடுப்பீங்க, ஆனா, அவங்க நீங்க சொல்ற டிரஸை எடுக்காம, அவங்களுக்கு பிடிச்சத தான் எடுப்பாங்க. அதெல்லாம் பாத்துட்டு நீங்க கடுப்பாகவே கூடாது.

இப்பிடி உங்க கேர்ள் பிரண்டோ இல்லை உங்க மனைவியோ சொன்னா உடனே அவங்க கிட்ட மனச விட்டு பேசி என்ன பிரச்சனைனு கேளுங்க..இல்லனா பெரிய பிரளயமே வெடிக்குங்கிறத மறந்திடாதிங்க.

மேக் அப்- ஓவரா இருக்கா..?
இப்பிடி கேட்டா உடனே பொசுக்குனு அமா-னு மட்டும் சொல்லிராதீங்க. கொஞ்சம் உங்க மனசாட்சியல்லாம் ஓரங்கட்டி வைச்சுட்டு, தூங்கி எந்திச்சா கூட நீ அழகாதான் இருப்ப-னு சொல்லுங்க. உண்மைய சொல்றேனு சொல்லி வசமா மாட்டிக்காதீங்க.
 

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post