தாம்பத்தியத்தில் நாற்பது வயதிற்கு மேல் உள்ள பெண்களில் திடீரென ஏற்படும் மாற்றங்கள்...!

பெண்களிடம் ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு மாற்றங்கள் உண்டாகும். இதற்கு காரணம் ஆண்களை காட்டிலும், பெண்களின் உடலில் தான் அதிக ஹார்மோன் மாற்றங்கள் உண்டாகின்றன. வயதுக்கு வரும் போது, கருத்தரிக்கும் போது, மாதவிடாய் காலங்களில், மாதவிடாய் நிற்கும் தருவாய் என பெண்களின் வாழ்க்கையில் 15 வயதில் இருந்து 45 வயது வரை இது போன்ற மாற்றங்கள் நீடிக்கும். இந்த இடைப்பட்ட காலத்தில் அவர்கள் 10 - 20 வருடங்கள் கணவனுடன் கழிக்கிறார்கள். இந்த வயதுகளில் பெண்களிடம் மாற்றங்கள் தென்படும் போது, கணவன்மார்கள் அவர்களை மிகுந்த அன்புடனும், அனுசரிப்புடனும் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்...

நாற்பது வயதுக்கு மேல் தான் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நிற்க ஆரம்பிக்கும் 45 - 50 பெரும்பாலானவர்களுக்கு மாதவிடாய் நின்றுவிடும். ஒருசிலருக்கு அரிதாக 55 வயதுகளில் மாதவிடாய் நிற்கலாம். இதன்பால் தான் பெண்களிடம் அதிக மனநல மாற்றங்கள் உண்டாகின்றன.

பொதுவாகவே பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் மூட்ஸ்விங் எனப்படும் மனநல மாற்றங்கள் அதிகரிக்கும். இது மாதவிடாய் முற்றிலுமாக நிற்கும் காலத்தில் அதிகமாக இருக்கும். அவசியமின்றி கோபப்படுவார்கள். அளவுக்கு மீறி அழுவது, சோகமாக காணப்படுவது போன்றவை இருக்கும்.

திடீரென இன்பமாக இருப்பது, திடீரென சோகமாக மாறுவது போன்ற நிகழ்வுகளும் உண்டாகும். இது இயல்பு தான். மாதவிடாய் நின்ற சில காலத்தில் இவர்கள் தானாக சரியாகிவிடுவார்கள். இதற்காக தனியாக மருத்துவம் அல்லது மருந்துகள் என்று தீர்வுக் காண செல்ல தேவை இல்லை.

இந்த நேரத்தில் பெண்களுக்கு தேவையான ஒன்று அனுசரித்து போவது தான். கணவர்கள் அவர்கள் கோபப்படும் போதோ, சோகமாக இருக்கும் போதோ திட்டாமல், அவர்களை அனுசரித்து, நீங்கள் அவர்களை பக்குவப்படுத்தி செல்ல வேண்டும்.எதிர்த்து நீங்கள் கோபப்படுவது அவர்களின் மனதை மேலும் புண்படுத்தும், அதிக தாக்கத்தை உண்டாக்குமே தவிர, தீர்வை அளிக்காது. பதில் தெரிந்தே ஆகவேண்டும், ஏன் சோகமாய் இருக்கிறாய், கோபப்படுகிறாய் என கேள்விகள் கேட்காமல், நீங்களாகவே இதை புரிந்துக் கொண்டு நடக்க வேண்டும்.

அதிக அன்பை வெளிப்படுத்துங்கள். உண்மையில், இந்த மாதவிடாய் காலத்தில் இருந்து வெளிவந்த பிறகு, மனைவி உங்கள் மீது அதிக அன்பை வெளிப்படுத்துவார். எனவே, அவர் அவதிப்படும் அந்த காலத்தில் நீங்கள் செலுத்தும் அன்பு இரட்டிப்பு மடங்காக உங்களுக்கே திரும்ப வரும்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post