உடலுறவில் அதீத ஆர்வமுள்ள ஆண்கள் உறவில் செயல்படுத்தும் 3 மைன்ட் கேம்ஸ் இதுதானாம்...!


நமது நட்பு வட்டாரத்திலேயே இப்படி ஒரு நபரை பார்க்க முடியும். தன்னை தானே பெருமைப்படுத்தி பேசுவார்கள், தங்கள் மீது ஈர்ப்பு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக எல்லாமே தங்களுக்கு தெரியும் என்பதை காட்டிக்கொள்ள முயற்சி செய்வார்கள்.
 
இவர்கள் எண்ணம் முழுக்க ஒருவரை வசீகரிக்க வேண்டும், தான் தான் அனைத்தும் அறிந்த நபர் என்ற பிம்பத்தை உண்டாக்க வேண்டும் என்பதில் மட்டும் தான் இருக்கும்.
 
இப்படி ஒரு பிம்பத்தை ஒரு உறவில் உருவாக்க ஆண்கள் இதுபோன்ற மைன்ட் கேம்ஸ் எல்லாம் செய்வார்கள் என்பது குறித்து இங்கு காணலாம்...


 
வீண்பெருமிதத்துக்குரிய உணர்வு!
இந்த உலகில் தாங்கள் இல்லாமல் ஏதும் நடக்காது என நம்புவார்கள். உங்களையும் நம்ப வைப்பார்கள். தங்களை தாங்களே மிக பெருமையாக கூறிக் கொள்வார்கள்.

விரிவாக்கம்!
எங்கு போனோம், என்ன செய்தோம், என்ன வாங்கினோம், யாருடன் இருந்தோம் என்பதை மிக பகட்டாக கூறிக் கொள்வார்கள். இது ஒருவிதமான எரிச்சலை உண்டாக்கும். இப்படி கூறுவதால் தங்களை மற்றவர்கள் வாய் பிளந்து வியப்பாக பார்ப்பார்கள் என்ற எண்ணம் அவர்களிடம் மிகுதியாக இருக்கிறது.

பச்சாதாபம்!
உப்பு அளவிற்கு கூட பச்சாதாபம், அனுதாபம், அக்கறை காட்ட மாட்டார்கள். இப்படி நடந்துக் கொள்வதால் தாங்கள் அனுதாபம் தேடுபவர்களை அவர்களாக முயற்சிக்க முனைகிறோம் என்ற கருத்தை வேறு முன் வைப்பார்கள்.

எடுத்துக்காட்டாக....
ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவரிடம் நல்ல வார்த்தை அல்லது அக்கறையாக பேசுவதை தவிர்த்து, அவரை பற்றி மற்றவரிடம், அவன் புகைத்து தள்ளினான் அதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இதற்கெல்லாம் எதற்கு இரக்கம் என கூறுவார்கள்.

உடையக் கூடிய சுயமரியாதை!
தன்னம்பிக்கை, சுய மரியாதை என்ற பெயரில் மற்றவர்களை ஏளனமாக பார்ப்பார்கள். அவன் எல்லாம் அவ்வளவுதான், அவன அந்த அளவுல தான் வைக்கணும் என்பது போல பேசுவார்கள். தாங்கள் ஒரு விமர்சகர்கள், தாங்கள் விமர்சிக்கவே பிறந்தவர்கள் என கருதுவார்கள்.

உண்மையில் சற்று புத்திசாலிகளும் கூட...
அதீத ஆசை, இச்சை எண்ணம் கொண்டவர்கள் உண்மையில் புத்திசாலியாகவும், ஈர்ப்பாகவும் தான் இருப்பார்கள். அவர்களது பேச்சு மற்றவர்களை சுண்டியிழுக்கும். மற்றவர்கள் தங்கள் மீது ஈர்ப்பு கொள்வதற்காகவே

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post