முள்ளிவாய்க்காலில் நினைவுச்சின்னம் வைக்க... தடை போட்ட இலங்கை நீதிமன்றம்!!

இலங்கை இனப்படுகொலையைச் சித்தரிக்கும் நினைவுத்தூபி மற்றும் சின்னங்களைத் திறப்பதற்கு அந்நாட்டின் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண்

இனப்படுகொலைத் தாக்குதலில் சிங்கள இலங்கை அரசப்படையால் தமிழீழ மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும்வகையில், இறுதித்தாக்குதல் நடந்த கிழக்கு முள்ளிவாய்க்கால், சின்னப்பர் கத்தோலிக்க தேவாலயம் அருகிலுள்ள பகுதியில், இன்று காலையில் நினைவேந்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன . பாதிரியார் இராஜேந்திரன் எழில்ராஜன் என்பவர் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். 


பெண்ணின்  கணவர் தூக்கிச்செல்வதையும் அருகில் குழந்தை 

நினைவேந்தலுக்காக, படுகொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணை அவரின் கணவர் தூக்கிச்செல்வதையும் அருகில் ஒரு குழந்தை அச்சத்தோடு நின்றுகொண்டிருப்பதையும்  சித்தரிக்கும் சிலை ஒன்றும் அங்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும் சிங்களப்படையின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட 500 கற்களும் அங்கு வைக்கப்பட்டிருந்தன. 

இலங்கை

இப்படியான நினைவுச்சின்னத்தை அனுமதிப்பதால் இனப்படுகொலை குறித்து மக்களின்  உணர்வுகளைக் கிளறிவிடும் என்பதால், முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தடை கோரி வழக்கு பதியப்பட்டது. வழக்கை விசாரித்த முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம், இலங்கையின் தேசியப் பாதுகாப்புக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அமைதிக்கும் சமாதானத்துக்கும் இந்நிகழ்வு பங்கம் ஏற்படுத்தும் எனக்கூறி, தடைவிதித்தது. 

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post