ஹட்டனில் இளம் வயது தந்தை தூக்கிட்டு தற்கொலை..!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொத்தஸ் பகுதியில் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

ரொத்தஸ் தோட்டத்தை சேர்ந்த 30 வயதுடைய பீ.வசந்தன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

இச்சம்பவம் இன்று காலை 6 மணியளவிலே அவரது வீட்டின் சமையலறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. 


குடும்பதகராறே தற்கொலைக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் உறவினர்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய மீட்கப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்கொலை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post