புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையில் பொலிஸ் அதிகாரி கைது!

யாழ்ப்பாணம் புங்குடுத்தீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பில், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவே வித்தியா கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை விடுவித்த குற்றச்சாட்டின் கீழ் இன்றைய தினம் கைது செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களம், குற்ற விசாரணைத் திணைக்களத்தின் விசாரணையை அடிப்படையாக கொண்டு அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.


2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டார்.

வித்தியா படுகொலைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சுவிஸ்குமார் என்பவர் தப்பிச் செல்வதற்கு உதவியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சட்டத்தரணியும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டப் பிரிவு பேராசிரியருமான தமிழ்மாறனின் கோரிக்கைக்கமைய சுவிஸ்குமாரை இவர் விடுவித்ததாக தகவல் வெளியானது.

சுவிஸ் குமார் விடுக்கப்பட்டதற்கும் லலித் ஜயசிங்கவுக்கும் தொடர்பு இருப்பதாக, தற்பொழுது யாழ் மேல் நீதிமன்றில் நடைபெற்றுவரும் ட்ரியல் அட் பார் மன்று முன் தமிழ்மாறனால் சாட்சியம் வழங்கப்பட்டது. இதனையடுத்து சட்டமா அதிபர் திணைக்களம் அவசரமாக லலித் ஜயசிங்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளமையை அடுத்தே இவர் இன்று கைதாகிறார்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post