யாழ். பண்ணை கடலில் நடக்கும் காட்சியை பார்த்து ஆச்சரியத்தில் மக்கள்!!!

யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கோட்டைக்கு பின்புறமாகவுள்ள பண்ணை கடற்கரைச் சுற்றுலா மையத்தில் கடலில் நடக்கும் வசதி மேம்படுத்தப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த திட்டத்துக்காக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சு, யாழ். மாவட்ட செயலகம் மற்றும் யாழ். மாநகர சபை என்பன முழு அளவிலான பங்களிப்பை வழங்கியுள்ளதோடு 40 மில்லியன் ரூபாவரை இதற்கென செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


யாழ்ப்பாணத்தின் புகழ் பெற்ற சுற்றுலா இடங்களில் ஒன்றான ஒல்லாந்தர் கோட்டையும் அதனோடு இணைந்த பண்ணைக் கடற்கரையும் தற்பொழுது மாலை வேளைகளில் மக்கள் பெருக்கத்தால் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையிலேயே கடலில் நடப்பதற்கான வசதிகளும் செய்யப்படவுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post