திருமணமாகி சிலநாட்களிலேயே இளைஞனுக்கு நடந்த துயரம்! மனம் பதறிய மனைவி!!!

ஸ்ரீலங்காவின் கேகாலை மாவட்டம் மாவனல்ல நகரின் உடுமஹனே பிரதேசத்தில் திருமணமாகி சில நாட்களிலேயே நபர் ஒருவர் உயிரிழந்த விடயம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான ரங்க என்ற இளைஞரே டெங்கு நோயின் காரணமாக இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ரங்க மற்றும் மஹேஷா தம்பதியினர் கடந்த மே மாதம் 18ம் திகதி தமது பெற்றோரின் ஆசிர்வாதத்துடன் திருமண பந்தத்தில் இணைந்தனர்.


ஆனாலும் இவர்களின் திருமண வாழ்க்கை ஒன்றரை மாதங்களே நீடித்துள்ள நிலையில் மாப்பிள்ளையான ரங்க என்பவர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் பணியாற்றும் ரங்க, தனது தாய், தங்கை மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில் வாழ்ந்துவந்துள்ளார். இந்நிலையில் திடீரென ரங்க டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு, தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுக் கொண்டு மீண்டும் வழமை போன்று தொழிலுக்கு செல்ல ஆரம்பித்துள்ளார்.

ஆனாலும் அவரது டெங்கு நோய் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மாவனல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்றுவந்தார். எனினும் சிகிச்சைகள் பலனின்றி ரங்க உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post