தன் மீது அடிக்கடி சந்தேகப்படும் கணவருக்கு மனைவி எடுத்த அதிரடி முடிவு...!

மனைவியை மிரட்டி நிர்வாணப் புகைப்படம் எடுத்து வெளி நபர்களுக்கும், உறவினர்களுக்கும் வழங்கிய கணவனை புத்தல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தன் மனைவியை மிரட்டி அடித்து, துன்புறுத்தி நிர்வாணப்படுத்தி கையடக்கத் தொலைபேசியில் புகைப்படங்களை எடுத்து நண்பர்கள், உறவினர்கள், வெளியாட்களுக்கு என பகிர்ந்தளித்துள்ளார்.

கணவரின் இத்தகைய கொடுமைகளுக்குள்ளான 24 வயதுடைய மனைவி, கணவரின் கொடுமையைத் தாங்க முடியாமலும், தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் புத்தல பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் தன் மனைவி மீது அடிக்கடி சந்தேகப்படும் குணமுடையவர் என்றும் சந்தேக குணத்தால் மனைவியை காட்டு மிராண்டித்தனமாக பல தடவைகள் தாக்கியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவரை பொலிஸார் வெல்லவாய மஜிஸ்திரேட் நீதி மன்றில் ஆஜர்படுத்தியபோது, எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post