விடு­மு­றைக்கு வீடு வந்­தி­ருந்த கண­வ­னால் மனைவிக்கு ஏற்பட்ட பரிதாபம்...!

தம்­ப­தி­க­ளுக்­கி­டையில் இடம்­பெற்ற கருத்து முரண்­பா­டு­க­ளை­ய­டுத்து ஏற்­பட்ட மோதலில், இளம் பெண் கடுங்­கா­யங்­க­ளுக்­குள்­ளாகி, மொன­ரா­கலை அர­சினர் மருத்­து­வ­மனை, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

இச்­ சம்­பவம், மொன­ரா­கலை பகு­தியின் ஹீலந்­தாவை என்ற இடத்தில் நேற்­று­ முன்­தினம் இரவு இடம்­பெற்­றுள்­ளது.

அதே இடத்தைச் சேர்ந்த  (23 வயது) நிரம்­பிய இளம் குடும்பப் பெண்ணே தாக்­கப்­பட்டு, அர­சினர் மருத்­து­வ­மனை தீவிர சிகிச்சை பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருப்­ப­வ­ராவார். 

இச் ­சம்­பவம் குறித்து, மொன­ரா­கலைப் பொலி­ஸா­ருக்கு கிடைக்­கப்­பெற்ற தக­வ­லொன்­றி­னை­ய­டுத்து குறிப்­பிட்ட இளம்­பெண்ணின் கணவர் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்ளார். 

கைது செய்­யப்­பட்ட நபர், கடற்­படை சிப்­பா­யாக இருந்து வரு­வ­துடன் விடு­மு­றைக்கு வீடு வந்­தி­ருந்த போதே, இரு­வ­ருக்­கி­டையில் கருத்து முரண்­பா­டுகள் ஏற்­பட்டு, கண­வ­ரினால் கூரிய ஆயுதமொன்றினால் மனைவி தாக்கப்பட்டமை, ஆரம்ப பொலிஸ் விசாரணைகளின் போது, தெரியவந்துள்ளது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post