பாடசாலை அதிபராக இருக்கும் ஒருவர் செய்கின்ற வேலையா இது?...

சுவாருஸ்யமான கதையிது…. கேட்டுப்பாருங்கள்.

தமிழரசுக்கட்சி பாராளுமன்ற  உறுப்பினர்  சிவஞானம்  சிறிதரன்  அவர்கள்  கடந்த  காலங்களில்  செய்த  சித்துவேலைகள் வெளிச்சத்துக்கு  வந்துகொண்டிருக்கின்றன…

அந்த வகையில…..

வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களின் தொடராக கூட்டமைப்பின் முக்கியஸ்தர்க ளுக்கு இடையிலான முரண்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றன

இதன் ஒரு கட்டமாக தமிழரசுக்கட்சி யின் கிளிநொச்சி மாவட்ட மாகாணசபை உறுப்பினர் ப.அரியரட்ணத்துக்கும் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதர னுக்கும் இடையிலான பிணக்கு வலுவடைந்துள்ளது.

மாகாணசபை உறுப்பினர் ப.அரியரட்ணம் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அறிவித்திருந்த நிலையில், அவசரமாக ஊடகவியலாளர்களை சந்தித்த மாகாணசபை உறுப்பினர் ப. அரியரட்ணம், பாடசாலைக் காலங்களில்  சிவஞானம் சிறீதரன் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக கருத்துக்களை வெளி யிட்டிருக்கின்றார்.

இதன் ஒரு பகுதியாக பாடசாலை ஒன்றில் சி.சிறீதரனும் இன்னொரு ஆசிரியரும் செய்ததாகத் தெரிவித்த ஒரு சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

• ஒரு பாடசாலை அதிபராக இருந்தவர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பதவிவகிக்கும் ஒருவர் செய்கின்ற வேலையா இது??

• இப்படிப்பட்ட ஒருவரை பாராளுமன்றத்துக்கு தமிழர்கள் தெரிவு செய்து அனுப்பியமைக்காக தமிழர்கள்தான் வெட்கப்படவேண்டும். (இதையிட்டு தமிழரசுக் கட்சியின் வெட்கப்படமாட்டார்கள்)

• எப்படி சிவஞானம் சிறிதரன் பாடசாலை அதிபாராக வந்தார்?? அவரின் தலைமையில் இயங்கிய பாடசாலைகள், படித்த மாணவர்களின் ஓழுக்கம், கல்வி தராதரம் என்னவாக இருந்திருக்கும்???

• சிறிதரனின் கல்வி தகமைகள் பற்றி ஆராயப்பட வேண்டும்.

ஊழல், அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட முன்னால் கல்வி அமைச்சருக்கு எதிராக முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததுபோன்று, தமிழரசுக்கட்சித் தலைமை சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக எதாவது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்களா??

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post