சோதிடம் பார்க்கும் பெண்ணுக்கு தங்க உருண்டைகள்... எப்படி வந்தது எனத் தெரியுமா?....

ஹப­ரா­து­வையில் ஆலயம் ஒன்றில்  சோதிடம் கூறும் 55 வயது பெண் ஒரு­வரை ஏமாற்றி 25 இலட்ச ரூபாவை பெற்றுக் கொண்டு போலி தங்க உருண்­டை­களை  ஒருவர் வழங்­கி­ய­தாக கிடைத்த முறைப்­பா­ட்டை­ய­டுத்து மாத்­தறை பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

இப் பெண்­ணிடம் வந்த நபரொ­ருவர் தோஷம் கழிக்­கும்­போது பாத்­தி­ர­மொன்று கிடைத்­த­தா­­கவும் அதில் பாம்­பொன்று இருக்­க­லா­மென்ற அச்­ச­மேற்­பட்­டதால் இது தொடர்­பாக ஆராய்ந்து பார்க்க வரு­மாறு அப்­பெண்ணை அழைத்தார்.

பெறு­ம­தி­யான ஏதும் கிடைத்தால் அதை எடுத்து கொண்டு தமக்கு வீட்டை நிர்­மா­ணித்துக் கொள்ள பணம் தரும்­ப­டியும் அந்­நபர் கேட்­டுள்ளார். 

வீடு திம்­பிய இந்த நபர் பின்னர் தொலை­பே­சியில் இப்­பெண்­ணுடன் தொடர்பு கெண்டு பாத்­தி­ரத்தில் செம்­பொன்று இருந்­த­தா­கவும் அதில் தங்க உருண்­டைகள்  காணப்­பட்­ட­தா­கவும்  ஒரு தங்க உருண்­டையை பரீட்­சித்துப் பார்த்­ததில் அது 7000 ரூபா பெறு­ம­தி­யா­ன­தென தெரி­ய­வந்­துள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

பின்னர் அப்பெண் 25 இலட்ச ரூபாவை எடுத்துச் சென்று தங்க உருண்­டை­களை வாங்கி வந்­துள் ளார். அதில் சில தங்க உருண்­டைகள் எனவும் ஏனை­யவை தங்க முலாம் பூசப்­பட்­ட­தெ­னவும் தெரி­ய­வந்­துள்­ளது. பின்னர் இப்பெண் இச் சம்பவம் குறித்து அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post