மது போதையில் வீடு­வந்த தந்தை தனது சொந்த மகளுக்கு செய்த கொடூரம்...!

தாயையும் மூத்த சகோ­த­ர­னையும் விரட்டி விட்டு இளைய இரு சகோ­த­ரிகள், சகோ­தரன் முன்­னி­லையில் 13 வயது மகளை மிகமோசமாக பாலியல் துன்­பு­றுத்தல் புரிந்த தந்தை ஒரு­வரை நாவுல பொலிஸார் நேற்று கைது செய்­தனர்.

நேற்று முன்­தினம் இரவு 9 மணி­ய­ளவில் மது போதையில் வீடு­வந்த ஐந்து பிள்­ளை­களின் தந்தை தன் மனை­வி­யையும் மக­ளையும் (சிறு­மியின் தாயையும் சகோ­த­ர­னையும்) விரட்­டி­ய­டித்­துள்ளார்.

இதன்பின்னர் தன் இளைய மகன், மகள்மார் முன்­னி­லையில் தனது 13 வயது மகளை பல­வந்­த­மாக மிரு­கத்­த­ன­மாக பாலியல் துன்­பு­றுத்­தலை புரிந்­துள்­ளனர் என நாவுல பொலிஸ் நிலைய பெண்கள் சிறுவர் பாது­காப்புப் பிரிவில் பாதிக்­கப்­பட்ட சிறு­மியும் தாயும் முறைப்­பாடு செய்­துள்ளனர்.

இத­னை­ய­டுத்து விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பொலிஸார் குறிப்­பிட்ட சந்­தேக நப­ரான தந்­தையை கைது செய்து நாவுல நீதி­மன்ற நீதிவான் சுரங்க முனசிங்க முன்­னி­லையில் ஆஜர் செய்­தனர்.

நீதிவான் சந்­தேக நபரை எதிர்­வரும் 18 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்­ட­துடன் சிறு­மியை சட்ட வைத்­திய அதி­காரி முன்­னி­லையில் வைத்திய பரிசோதனைக்குட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்கவும் நீதிவான் பொலிஸாருக்கு உத்தர விட்டார்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post